Home சினிமா கோலிவுட் RRR: மகேஷ் பாபு உடன் இணையும் எஸ்.எஸ். ராஜமௌலி!

RRR: மகேஷ் பாபு உடன் இணையும் எஸ்.எஸ். ராஜமௌலி!

341
0
SS Rajamouli Next Movie

Mahesh Babu; ஆர் ஆர் ஆர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் மகேஷ் பாபு ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.

ராம் சரண் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். அண்மையில், படத்தின் டைட்டில் லோகோவுடன் கூடிய RRR மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் ஆர் ஆர் ஆர் படத்தைத் தொடர்ந்து ராஜமௌலி அடுத்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை வைத்து ஒரு புதிய படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக டுவிட்டரில் #MaheshBabu, #SSRajamouli ஆகிய ஹேஷ்டெக்குகள் டிரெண்டானது.

SOURCER SIVAKUMAR
Previous articleஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்க: மீண்டும் சென்னை – 600 028 பாய்ஸ்!
Next articleசூது கவ்வும் பார்ட் 2 விரைவில் வருமா? யார் சொன்னது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here