Sun TV Donation; சன் டிவி ரூ.10 கோடி நிதியுதவி! சன் டிவி குழுமம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் இணைந்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 கோடி அறிவித்துள்ளன.
கொரோனா நிவாரண நிதியாக சன் டிவி ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருகின்றனர்.
கொரோனா காரணமாக சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், சினிமா தொழிலாளர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உதவும் வகையில், பிரபலங்கள், தொழில் நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என்று பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது சன் டிவி நிறுவனமும் கொரோனா பாதிப்புக்கு நிவாரண நிதியாக ரூ.10 கோடி அறிவித்துள்ளது. இது குறித்து சன் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கொரொனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சன் குழுமத்தின் 6000க்கும் அதிகமான பணியாளர்கள், தங்களது ஒருநாள் சம்பளத்தை கொரோனா நிவாரண நிதியாக கொடுக்க முன் வந்துள்ளனர்.
சன் டிவி நிறுவனம் அறிவித்துள்ள ரூ.10 கோடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு வகையில் பிரித்து வழங்கப்பட உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் நிவாரண திட்டங்களுக்கு நிதி…
வாழ்வாதாரம் இழந்த, புலம் பெயர்ந்த ஊழியர்களின் நலன் மற்றும் கொரோனா வைரஸ் நிவாரணர்த்திற்காக பணியாற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உடன் இணைந்து பணியாற்றுதல்
திரைத்துறை மற்றும் தொலைக்காட்சியில் தொடர்புடைய அன்றாட தினக்கூலி ஊழியர்களுக்கு நிதியுதவி…
என்று சன் டிவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sun TV had Donate Rs 10 crore to Corona Relief Fund…