Home சினிமா கோலிவுட் தமிழ் புத்தாண்டை சிறப்பித்த சன் டிவி: சும்மா கிழி தர்பார் கொண்டாட்டம்!

தமிழ் புத்தாண்டை சிறப்பித்த சன் டிவி: சும்மா கிழி தர்பார் கொண்டாட்டம்!

336
0
Sun TV Telecast Darbar Movie

தமிழ் புத்தாண்டை சிறப்பித்த சன் டிவி: சும்மா கிழி தர்பார் கொண்டாட்டம்! தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த தர்பார் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

தர்பார் படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்த படம் தர்பார். ரஜினியின் 167 ஆவது படமாக கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக தர்பார் (Darbar) படத்தில் நடித்திருந்தார். இவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.

மும்பையில் போதைப் பொருள் கும்பலை என்கவுண்டர் மூலம் சுட்டுத்தள்ளும் ஒரு டான் போலீஸ் தான் ரஜினி.

லைகா புரோடக்‌ஷன் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

என்னதான் ரஜினியின் வயதான தோற்றம் தர்பார் (Darbar) படத்தில் தெரிந்திருந்தாலும், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.

பாடல்களும் சொல்லவே வேணாம். அந்தளவிற்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு இருந்தது. அதுல சும்மா கிழி பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.

பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்ததாக விக்கிப்பீடியாக தகவல் தெரிவிக்கின்றது.

திரைக்கு வந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆன நிலையில், தர்பார் (Darbar) படம் டிவியில் வெளியாகி இருக்கிறது.

ஆம், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் ஏப்ரல் 14 பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன் பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி மேலும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில் புது படங்களை ஒளிபரப்புகிறது.

அதோடு தமிழ் புத்தாண்டு தினத்தையும் சிறப்பிக்கிறது சன் டிவி நிறுவனம். அந்த வகையில், ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை இன்று ஒளிபரப்பு செய்துள்ளது.

சன் டிவியில் (SunTV, 14th April at 6.30 PM) ஒளிபரப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி தர்பார் படம் ஸ்டார் கோல்டு இந்தியா என்ற ஹிந்தி சேனலில் ஒளிபரப்பு செய்துள்ளது.

தொடர்ந்து ஜெமிமினி டிவியில் தர்பார் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சன் டிவியில் தர்பார் படம் ஒளிபரப்பு செய்யப்படுவதைத் தொடர்ந்து ஹலோவில் தர்பார் சன் டிவியில் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஉண்மையான கொசக்சிக் பசப்புகழ்,யாரென்று தெரியுமா?
Next article15/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here