Home சினிமா கோலிவுட் விரலை கட் பண்ணிவிட்டு வலியால் துடித்த சன்னி லியோன்: வைரலாகும் வீடியோ!

விரலை கட் பண்ணிவிட்டு வலியால் துடித்த சன்னி லியோன்: வைரலாகும் வீடியோ!

358
0
Sunny Leone

Sunny Leone Prank Video; விரலை கட் பண்ணிவிட்டு வலியால் துடித்த சன்னி லியோன்: வைரலாகும் வீடியோ! தனது விரலை கட் பண்ணிவிட்டு வலியால் துடித்த சன்னி லியோனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை சன்னி லியோனின் பிராங்க் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சர்ச்சைக்கு பேர் போனவர் பாலிவுட் நடிகை சன்னி லியோன். கிளாமராகவும், ஆபாசமாகவும் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வீரமாதேவி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். ஹிந்தி மொழியைத் தவிர நேபாள் மற்றும் வங்கதேச மொழியிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் முடங்கியிருக்கின்றனர்.

வீட்டிலேயே இருக்கும் பிரபலங்கள் சமையல், யோகா, வீட்டை சுத்தம் செய்வது, ரசிகர்களுடன் உரையாடுவது என்று அன்றாடம் தாங்கள் செய்யும் வேலைகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், பாலிவுட் நடிகை சன்னி லியோன் தனது நடுவிரலை கட் செய்வது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், இடது கை நடுவிரலை மடக்கி வைத்துக் கொண்டு, கத்தியால் வெட்டிக் கொண்டதாக தனது கணவரை ஏமாற்றுகிறார்.

கட் செய்துவிட்டு வலியால் துடிப்பது போன்றும், அவரது கணவர் அலறி அடித்துக் கொண்டு ஓடு வந்து, ஒரு துணியை எடுத்து கையை பிடிப்பது போன்றும் அந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

சன்னி லியோனின் பிராங்க் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

This ain’t no cooking video!!!! Haha @dirrty99 got pranked and served!!

A post shared by Sunny Leone (@sunnyleone) on May 3, 2020 at 2:23am PDT

//www.instagram.com/embed.js

SOURCER SIVAKUMAR
Previous articleகாமெடி நடிகர் என்னிடம் தவறாக நடக்க முயற்சித்தார்: நடிகை பிரகதி!
Next article2.5 இலட்சம் வெளிமாநில தொழிலாளர்கள் திரும்பி செல்ல விண்ணப்பம், வெளிமாநில தமிழர்களின் நிலை?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here