Home சினிமா கோலிவுட் ஜோதிகா கருத்து: மதங்களை கடந்து மனிதமே முக்கியம்: சூர்யா வெளியிட்ட அறிக்கை!

ஜோதிகா கருத்து: மதங்களை கடந்து மனிதமே முக்கியம்: சூர்யா வெளியிட்ட அறிக்கை!

393
0
Suriya And Jyothika

Suriya Press Release; ஜோதிகா கருத்து: வைரலாகும் சூர்யா வெளியிட்ட அறிக்கை! விருது வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையாகவும், விவாதமாகவும் மாறி வரும் நிலையில், நடிகர் சூர்யா இது குறித்து அறிக்கை வெளியிட்ட்டுள்ளார்.

ஜோதிகா தெரிவித்த கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றும், அதில், நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்றும் கூறி சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விருது விழாவிற்கு சென்றிருந்த நடிகை ஜோதிகா, கோயிலுக்காக நிறைய செலவு செய்கிறீர்கள், அதிகளவில் பராமரிக்கிறீர்கள்.

அதே அளவில் பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பராமரிக்க வேண்டும். அதற்காக நாம் நிதியுதவி அளித்து உரிய முறையில், பராமரிப்போம் என்று கூறியிருந்தார்.

இது பெரும் சர்ச்சையாகவும், விவாதத்திற்கும் உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், இது குறித்து தற்போது சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்கிற கருத்து சமூக ஊடக விவாதங்களுக்கு அப்படியே பொருந்தும்.

ஒரு விருது வழங்கும் விழாவில் எப்போதோ ஜோதிகா பேசியது, இப்போது ஊடகங்களில் செய்தியாகவும், சமூக ஊடங்கங்களில் விவாதமாகவும் மாறி இருக்கிறது.

கோவில்களைப் போலவே பள்ளிகளையும் மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை சிலர் குற்றமாக பார்க்கிறார்கள்.

இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். ‘மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை.

நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரியவாய்ப்பில்லை.

பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை அனைத்து மதங்களைச் சேர்ந்தவர்களும் வரவேற்கின்றனர்.

அறிஞர்கள், ஆன்மீக பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம்.

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதையே நாங்கள் எங்களது பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்.

தவறான நோக்கத்தோடு சிலர் தரக்குறைவாக பேசும்போதெல்லாம் நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் எங்களுக்கு துணை நிற்கிறார்கள்.

நல்ல எண்ணங்களை விதைத்து நல்ல செயல்களை அறுவடை செய்ய முடியும் என்கிற நம்பிக்கையை இவர்களே துளிர்க்கச் செய்கிறார்கள். எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Suriya Press Release

SOURCER SIVAKUMAR
Previous articleவைரலாகும் விஜய்யின் லயோலா கல்லூரி புகைப்படம்!
Next article2ஜி இணைய சேவை மே 11 வரை நீட்டிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here