Home சினிமா கோலிவுட் தமன்னாவுக்கு கச்சிதமாக பொருந்திய மீசை: வைரலாகும் வீடியோ!

தமன்னாவுக்கு கச்சிதமாக பொருந்திய மீசை: வைரலாகும் வீடியோ!

0
357
Tamannaah Mustache Video

Tamannaah Mustache Video; தமன்னாவுக்கு கச்சிதமாக பொருந்திய மீசை: வைரலாகும் வீடியோ! தமன்னா மீசையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மீசையுடன் இருக்கும் தமன்னாவின் வீடியோ வைரலாகி வருகிறது.

கடந்த 2005 ஆம் ஆண்டு வந்த கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை தமன்னா. அதன் பிறகு அஜித், விஜய், கார்த்தி, சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம் என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வந்த பாகுபலி படம் தமன்னாவின் மார்க்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றது.

கடந்தாண்டு விஷால் நடிப்பில் வந்த ஆக்‌ஷன் படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழ் படங்கள் எதுவும் கைவசம் இல்லாத நிலையில், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தற்போது கொரோனா லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே இருக்கும் தமன்னா தனது அன்றாட வேலைகளை வீடியோவாகவும், புகைப்படமாகவும் பதிவிட்டு வருகிறார்.

ஆம், உடற்பயிற்சி செய்வது, யோகா ஆகியவற்றை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தனக்கு மீசை வைத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து, மொபைல் ஆப் மூலமாக தனக்கு மீசை வைத்து அதனை முறுக்கியும் விட்டுள்ளார்.

அந்த மீசை தமன்னாவிற்கு கச்சிதமாக பொருந்தவும் செய்துள்ளது. தற்போது தமன்னா மீசையுடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here