Home சினிமா கோலிவுட் மாஸ் பஞ்ச் டயலாக்குல அஜித்தை மிஞ்ச யாருமில்ல!

மாஸ் பஞ்ச் டயலாக்குல அஜித்தை மிஞ்ச யாருமில்ல!

544
0
Thala Ajith Movie Dialogues

Ajith Movie Punch Dialogues; மாஸ் பஞ்ச் டயலாக்குல அஜித்தை மிஞ்ச யாருமில்ல! தல அஜித் தனது ஒவ்வொரு படத்திலேயும், தனக்கே உரிய பாணியில், மாஸ் டயலாக் பேசி அசத்தியுள்ளார்.

ஒரு படத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு படத்திலேயும் தல அஜித் மாஸ் டயலாக் பேசி தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு ஆகியவற்றின் மூலமே உச்சம் தொட்டவர் தல அஜித். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவருக்கு மட்டுமல்ல, தல அஜித் என்ற பெயருக்கு கலங்கம் நேர்ந்தால் இவரது ரசிகர்கள் பொருத்துக் கொள்ள மாட்டார்கள். வேறு யாரேனும், அஜித் பெயரை தவறாக பயன்படுத்தவும் விடமாட்டார்கள்.

அஜித் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பவர். தனது ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார். எப்போதும், யாரைப் பற்றியும் தவறான கருத்துக்களை பதிவு செய்யவும் மாட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது 20 ஆவது ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த நிலையில், வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.

இந்த நிலையில், அஜித் நடித்த படங்களில் அவர் பேசிய ஒவ்வொரு மாஸ் வசனத்தையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். ஒரு படத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு படத்திலும் அஜித்துக்கு என்று மாஸ் வசனம் இருக்கும்.

அஜித் பேசும் ஒவ்வொரு வசனமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெறும்.

என் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா.

என் போட்டோ வச்சு இருக்குறவன் 5க்கும் 10க்கும் கஷ்டப்பட்டாலும் அடுத்தவன் காசுக்கு ஆசைப் பட மாட்டான்.

என் ஆலுங்கள தொடனும் நா என்ன தாண்டி தொட்ரா பாக்கலாம்.

சாவுக்கு பயந்தவன் தினம் தினம் சாவான்…பயப்படாதவன் ஒருதடவதான் சாவான்.

ஒருத்தர் மேல விசுவாசத்த காட்டுறதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்கப்படுத்துறீங்க…

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அஜித் நடித்த ஒவ்வொரு படத்திலும் மாஸ் டயலாக் பேசி அசத்தியிருக்கிறார்.

உங்களுக்குப் பிடித்த வசனம் இருந்தால் கமெண்ட் பண்ணுங்க…

SOURCER SIVAKUMAR
Previous articleஉலகப் பொதுமறை திருக்குர்ஆன் பற்றி தெரிந்துகொள்வோம்
Next articleஆசிஷ் நெஹ்ரா; தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என நான் நினைக்கவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here