Home சினிமா கோலிவுட் ஹீரோயினாகும் விஸ்வாசம் அஜித்தின் ரீல் மகள் அனிகா!

ஹீரோயினாகும் விஸ்வாசம் அஜித்தின் ரீல் மகள் அனிகா!

355
0
Anikha

Anikha; ஹீரோயினாகும் விஸ்வாசம் அஜித்தின் ரீல் மகள் அனிகா! என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

மலையாள படம் ஒன்றில் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்த அனிகா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

தமிழில் தல அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. இந்தப் படத்தில், அஜித்தின் மகளாக நடித்தார்.

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் – நயன்தாராவுக்கு மகளாக நடித்தார்.

தனது மகளை 10 வருடங்களாக பிரிந்திருந்த அஜித், மீண்டும் தனது மகளுடன் சேர்ந்து வாழும் அப்பா மகள் செண்டிமெண்ட் காண்போரை கண்கலங்க வைத்ததோடு மெய்சிலிர்க்கவும் வைத்தது.

மேலும், ரசிகர்கள் அனைவரையும் அப்பாவையும், மகளையும் நினைக்க வைத்தது. என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களைத் தவிர நானும் ரௌடி தான், மிருதன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும், குயீன் என்ற வெப் சீரிஸிலும், மாமனிதன் படத்திலும் நடித்துள்ளார். இந்த நிலையில், 15 வயதாகும், அனிதாக ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். அதற்காக போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

மேலும், அவருக்கு மலையாளத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு வாய்ப்பு தேடி வந்துள்ளதாம்.

பள்ளி மற்றும் கல்லூரியில் நடக்கும் காதலை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.

Previous articleமகளோடு சைலண்ட் செல்ஃபி எடுத்த ஆல்யா மானசா: வைரலாகும் புகைப்படம்!
Next articleஆடி மாதம்: பிறக்கிறது ஆடி! MrPuyal இல் தினம் ஒரு திருத்தல தரிசனம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here