Home சினிமா கோலிவுட் Nanbar Ajith ஹேஷ்டேக் மூலம் அஜித்துக்கு வாழ்த்து சொன்ன விஜய் ரசிகர்கள்!

Nanbar Ajith ஹேஷ்டேக் மூலம் அஜித்துக்கு வாழ்த்து சொன்ன விஜய் ரசிகர்கள்!

365
0
Thala Birthday

Thala Birthday Celebration; Nanbar Ajith ஹேஷ்டேக் மூலம் அஜித்துக்கு வாழ்த்து சொன்ன விஜய் ரசிகர்கள்! தல அஜித்தின் 49 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு, விஜய் ரசிகர்கள் Nanbar Ajith ஹேஷ்டேக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித்துக்கு, விஜய் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் தனது தன்னம்பிக்கை, தைரியம், தன்னடக்கம், விடா முயற்சி ஆகியவற்றின் மூலம் உச்சம் தொட்டவர் தல அஜித். அதற்காக இவர் வாங்கிய வலிகளோ இவரது வரலாறு பேசும்.

பாசத்தில் விஸ்வாசம், தைரியத்தில் வீரம், செயல்படுவதில் விவேகம், பார்க்கும் குணத்தில் நேர்கொண்ட பார்வை, எதையும் செயலாற்றுவதில் வலிமை என்று அஜித்தின் படங்களே அவரது முழு உருவத்தையும் சித்தரிக்கும்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் சினிமா பிரபலங்களின் இதயங்களிலும் குடி கொண்டுள்ளார். இந்த நிலையில், இன்று தனது 49ஆவது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்துக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தளபதி விஜய் ரசிகர்கள் தல அஜித்துக்கு Nanbar Ajith ஹேஷ்டேக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதற்கு முன்னதாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது விஜய் கோட் சூட் அணிந்து வந்திருந்தது. இது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு நண்பர் அஜித்தைப் போன்று உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக இவ்வாறு வந்ததாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

அப்போதிலிருந்து நண்பர் அஜித் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. விஜய்யே அஜித்தை பற்றி பேசிய போது, அவரது ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன? விஜய் பயன்படுத்தி Nanbar Ajith ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அஜித்தின் 49 ஆவது பிறந்தநாளுக்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleபிரபலங்களின் மனதில் இடம் பிடித்த தல அஜித்துக்கு வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள்!
Next articleதீவிர பயிற்சிக்குப் பிறகு விஜய் சொல்லிக் கொடுத்த டான்ஸ் ஸ்டெப் போட்ட அனிருத்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here