Home சினிமா கோலிவுட் ரூ.30 முதல் ரூ.40 கோடி இருந்தால் போதும்: லோகேஷ் கனகராஜின் பட்ஜெட் பிளான்!

ரூ.30 முதல் ரூ.40 கோடி இருந்தால் போதும்: லோகேஷ் கனகராஜின் பட்ஜெட் பிளான்!

378
0
Master Movie Budget

Master Movie Budget; ரூ.30 முதல் ரூ.40 கோடி இருந்தால் போதும்: லோகேஷ் கனகராஜின் பட்ஜெட் பிளான்! மாஸ்டர் படத்திற்கு ரூ.30 முதல் ரூ.40 கோடி வரையில் மட்டுமே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பட்ஜெட் போட்டுள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு வெறும் ரூ.30 முதல் ரூ.40 கோடி வரையில் மட்டுமே லோகேஷ் கனகராஜ் பட்ஜெட் போட்டுள்ளார்.

கிட்டத்தட்ட ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட விஜய்யின் பிகில் படம் ரூ.300 கோடி வரையில் வசூல் கொடுத்தது.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். பிகில் படம் ரூ.180 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதால், மாஸ்டர் படத்திற்கும் அதிக பட்ஜெட் எதிர்பார்க்கப்பட்டது.

இதற்காக தயாரிப்பு நிறுவனம் இயக்குநர் லோகேஷ் கனகராஜை அணுகியுள்ளார். மேலும், படத்தின் பட்ஜெட் எவ்வளவு ஆகும் என்று கேட்டுள்ளனர்.

இதற்கு ரூ.30 முதல் ரூ.40 கோடி ஆகும் என்று கூலாக பதில் கூறியுள்ளார். இது விஜய் படமாச்சே பாத்து பண்ணுங்க என்று தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

எனக்கு என்ன தேவையோ அதைத் தான் நான் கேட்டேன் என்று கூறி அதே பட்ஜெட்டில் படத்தையும் முடித்துக் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

குறைந்த பட்ஜெட்டில் படம் முடிக்கப்பட்டுள்ளதால், மன மகிழ்ச்சியடைந்த தளபதி விஜய் ரூ.2 கோடியை சன்மானமாக கொடுத்துள்ளார்.

ஏற்கனவே படத்திற்காக ரூ.1.5 கோடி வரையில் சம்பளம் வாங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஆக மொத்தம் மாஸ்டர் படத்தில் ரூ.3.5 கோடி வரையில் சம்பளம் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில், தளபதி விஜய்க்கு ரூ.80 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇந்தியா ஆஸ்திரேலியா இடையே 5 டெஸ்ட் போட்டிகள் நடத்த திட்டம்
Next articleபேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 10% பங்குகளை வாங்க முடிவு செய்தது ஏன் தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here