Home சினிமா கோலிவுட் ஆர்ஆர்ஆர் (RRR) படத்தில் தளபதி விஜய்: புதிய டுவிஸ்ட்?

ஆர்ஆர்ஆர் (RRR) படத்தில் தளபதி விஜய்: புதிய டுவிஸ்ட்?

431
0

Vijay RRR Movie; ஆர்.ஆர்.ஆர் படத்தில் தளபதி விஜய்: புதிய டுவிஸ்ட்? ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகி வருகிறது.

எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் படத்தின் டிசைன் லோகோவுடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

பிகில் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள புதிய படம் மாஸ்டர்.

உலகமே அச்சுறுத்தி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக மாஸ்டர் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகாது என்பது தெளிவாக தெரிந்துள்ளது.

ஆதலால், மாஸ்டர் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தளபதி 65 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தளபதி65 படத்திற்காக விஜய் எந்த இயக்குநருடன் இணைவார் என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் பூகம்பமே வந்தது போன்று ஒவ்வொரு இயக்குநர் பெயர் அடிபடுகிறது.

இது ஒரு புறம் இருக்க விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் தகவலும் வந்துள்ளது. அது என்னவென்றால், ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் RRR படத்தில் விஜய் நடிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. அதுவும், சிறப்புத் தோற்றத்தில் என்கிறது தகவல்.

ஏற்கனவே பிரபுதேவா இயக்கத்தில், பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வந்த ரௌடி ரத்தோர் என்ற படத்தில் விஜய் நடித்துள்ளார்.

அதுவும், சிந்தா தா தா சிந்தா சிந்தா (Chinta Ta Ta Chita Chita) என்ற பாடலுக்கு பிரபு தேவா, அக்‌ஷய் குமார் ஆகியோருடன் இணைந்து டான்ஸ் ஆடியிருப்பார்.

தற்போது அதே போன்று சிறப்புத் தோற்றத்தில் RRR ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆர்ஆர்ஆர் (RRR).

இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

கிட்டத்தட்ட ரூ.350 கோடி பொருட்செலவில் உருவாகும் இந்தப் படம் கோமரம் பீம் மற்றும் சீதாராம ராஜூ ஆகிய சுதந்திர போராட்ட வீரர்களை மையப்படுத்திய படம் என்று கூறப்படுகிறது.

ராம் சரண் இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறாராம். ராம் சரணின் 35ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் (RRR) படத்தில் ராம் சரணின் கதாபாத்திரம் அடங்கிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோவில் போலீஸ் கதாபாத்திரத்திற்குரிய பாணியில், உடல் கட்டமைப்புடன் இருக்கும் ராம் சரண் தீவிர உடற்பயிற்சி செய்யும் காட்சி இடம்பெற்றுள்ளது.

இதனை பார்க்கும் போது இதற்கு முன்னதாக இது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் ராம் சரண் நடித்திருக்கமாட்டார் என்று தோன்றிகிறது.

அதோடு, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை மிஞ்சும் அளவிற்கு இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று முன் தினம் இப்படத்தின் டைட்டில் லோகோவுடன் கூடிய RRR மோஷன் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதில் ஒருபுறம் ஜூனியர் என்டிஆர் நீருக்கு அடியில் இருந்து ஓடி வருவது போன்றும், மறுபுறம் ராம் சரண் நெருப்பு பிழம்போடு ஓடி வருவது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

நடுவில், இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது போன்று படத்தின் போஸ்டரில் காட்டப்பட்டுள்ளது.

டைட்டிலில் உள்ள ஒவ்வொரு RRR ஆரிலும், ராம் சரண் முகம் Left R, ஜூனியர் என்டிஆர் முகம் Right R மற்றும் இருவரது கைகளும் பிணைக்கப்பட்டிருப்பது Middle R போன்று காட்டப்பட்டுள்ளது.

அதோடு, டைட்டில் போஸ்டரில் இரத்தம் (Left R), ரணம் (Middle R), ரௌத்திரம் (Right R) என்றும், இந்தியா 1920 (India 1920) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று போஸ்டரிலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மோஷன் போஸ்டரில் பின்னணி இசையும் பக்க பலமாக அமைந்துள்ளது.

டைட்டில் லோகோவுடன் கூடிய ஆர்ஆர்ஆர் மோஷன் போஸ்டரை பார்க்கும் போது பாகுபலியை மிஞ்சும் அளவிற்கு இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் திரைக்கு வருகிறது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇளவரசன் பிறந்த சந்தோஷத்தில் ஜோக்கர் இயக்குநர்!
Next article28/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here