Thamasha : தமாஷா எனும் மலையாளப்படத்தை பற்றிய ஒரு பார்வை!
‘Ondu motteya kathe’ என்ற கன்னட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான மறுஉருவாக்கம்தான் ‘தமாஷா’ என்கிற மலையாளத்திரைப்படம்.
ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் மலையாள திரைப்படத்திற்கான் சுபாவங்களை திரைப்படம் முழுக்க காணமுடிகிறது. மலையாளத்தில் இத்திரைப்படத்தை இயக்கியவர் ‘அஷ்ரஃப் ஹம்சா’ .
பிரேமம் திரைப்படத்தில் சாய்பல்லவியை காதலிப்பது போன்று வேடிக்கையாக ஒரு ஆசிரியர் கதாப்பாத்திரம் கையாளப்பட்டிருக்கும். மாவா என்று அழைக்கப்படும் அந்த ஆசிரியர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர்தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகன். அவரின் பெயர் ‘வினய் ஃபார்ட்’. மேலும் திவ்ய பிரபா, சின்னு சந்தினி நாயர், கிரேஸ் ஆண்டனி, அருன் குரியன், நவாஸ் போன்றோரும் நடித்திருக்கின்றனர்.
கதை
முக்கால்வாசி தலைமுடி இல்லாத கல்லூரியில் வேலை செய்யும் ஒரு ஆசிரியர், தனக்கு கல்யாணத்திற்காக பெண் தேடுகிற போது நடக்கும் அட்ராசிட்டிகளில் கதை ஆரம்பித்து
காதல், நட்பு, அரவணைத்தல், வலி, அன்பு, body ashaming, bullying என திரைப்படம் பல குணங்களை தொடுகிறது. வெறுமனே தொட்டுச்செல்லாமல் திரைப்படத்தை பார்த்து முடித்தப்பின்னும் நமக்குள் குறைந்தபட்சமாக, ஒரு 15 நிமிடமாவது நற்குணங்களை விதைத்து வைக்கிறது.விதைத்து வைக்கும்.
நகர்வு
தினசரி வாழ்வில் நாம் கடக்கும் மனிதர்களில் ஒருவரை
பிடித்துக்கொண்டு அவர் வாழ்வை நமக்கு காண்பிப்பது போலானது தமாஷா. சொட்டை தலையுடனிருக்கும் நபர்களை தொடர்ந்து கிண்டல் செய்தபடி மட்டுமே திரைப்படத்தில் கண்டு பழகிய நமக்கு
தமாஷா காமெடிகளுடன் அவர்களுக்குள் இருக்கும்
எமொஷன்களையும் நம்முடன் கணெக்ட் செய்கிறது. அதற்காக சோக காட்சிகளாக திரைப்படுத்தி நம்மை கண்ணீராக விட்டுக்கொண்டிருக்க
செய்யவில்லை. கதை வெகு இயல்பாகவே நகர்கிறது பெறும்பாலும் காமெடி காட்சிகளை கொண்டே நகர்கிறது. சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஈடேறிக்கொண்டிருக்கும்
Body shamingகையும் bullyingகையும் காண்பித்த விதம் பாராட்டக்கூறியது.
சின்னு என்கிற கதாப்பாத்திரம் கொண்டிருக்கும் தைரியத்தையும் நேர்மறை குணத்தையும் வெளிப்படையாக்காமல் கதையினூடே கூறியதும் அசத்தல்.
இறுதிக்காட்சிகளில் சின்னு கதாப்பாத்திரம் சிந்தும் துளிகளோடு
நாமும் கரைகிறோம். மேலும் பாடல்களும் அவைகளின் காட்சிப்பதிவுகளும் கூடுதல் சிறப்பு.
மாஷே என்கிற காதாநாயகனுடன் இருக்கும் நண்பன் ரஹீம் கதாப்பாத்திரமும் கதைக்கு பக்கபலம்.
உடல் குறைகளை தாண்டியும் மனிதர்களை ஏற்பது என்பதுதான் படத்தின் ஆதி. ஏற்பதென்பது ப்ரியத்தினால் அன்பினால் நிகழவேண்டும் என்பது கதையின் நிகழ்வு.
STOP BULLYING என்ற வார்த்தையை சமூகவலைதளங்களில் ஏதேனும் ஓர் பெரிய துர்சம்பவம் நடக்கும்போது மட்டுமே நம்மால் காண நேர்கிறது. நாமும் அப்போது மட்டும்தான் உபயோகிக்கிறோம். அதுவும் வார்த்தையாக மட்டும்தான். மனித இயல்பில் பலரிடம் இதை காண இயலவில்லை. அப்படியே கண்டாலும் அதுவும் சில நாட்களுக்கு மட்டுமே! பின்பு அப்படியொரு வார்த்தையை கூட நாம் நினைவில் வைத்திருப்பதில்லை.
மனிதர்களுக்குள் இருக்கும் மனிதர்களுக்கிடையில் இருக்கும் எளிமையான விஷயங்களை காட்சிபடுத்துவது வெறுமனே அழகியல் மட்டுமல்ல. அத்தியாவசியமானதும் கூட!
மேகம் மட்டும் வானமில்லைதேகம் மட்டும் வாழ்க்கையில்லைபுலன்களை கடந்தும் கூடஇன்பமிருக்கும் !
என்ற ‘வைரமுத்து’ அவர்களின் வரிகளுக்கு ஏற்பவே நிகழந்திருக்கிறது இக்கதை.
எளிமையான கதைகளை விரும்பி பார்ப்பவர்களுக்கு இத்திரைப்படம் நிச்சயம் விருந்தாக அமையும்
திரைப்படம் manorama max தளத்தில் காணக்கிடைக்கிறது.