Home சினிமா கோலிவுட் கொரோனா விழிப்புணர்வு வீடியோ இல்லையா? சுயநலம் கொண்ட சினிமா பிரபலங்கள்!

கொரோனா விழிப்புணர்வு வீடியோ இல்லையா? சுயநலம் கொண்ட சினிமா பிரபலங்கள்!

359
0
Ajith and Vijay Corona Awareness

Celebrities Avoiding Awareness; கொரோனா விழிப்புணர்வு வீடியோ இல்லையா? சுயநலம் கொண்ட சினிமா பிரபலங்கள்! கொரோனா வைரஸ் குறித்து அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் என்று பலரும் டுவிட்டர், வீடியோ மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் சிலர் எனக்கென்ன வந்தது என்று இருக்கின்றனர்.

உலக நாடுகளையும் கடந்து இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மத்திய, மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால், அப்பாவி ஜனங்கள் முதல் சினிமா, அரசியல் பிரபலங்கள் என்று பலரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

வீட்டில் சிலர் சமூக வலைதளங்களிலும், சிலர் குடும்பத்தோடும், சிலர் தனிமையிலும் தங்களது நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்தும், 21 நாட்கள் ஊரங்கு உத்தரவு குறித்தும், பாதுகாப்பு குறித்தும் சினிமா பிரபலங்கள் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சூர்யா, சிவகார்த்திகேயன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சாந்தணு, பார்த்திபன், ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், தனுஷ், வரலட்சுமி சரத்குமார், அக்‌ஷய் குமார், த்ரிஷா, சிம்ரன்,  என்று பலரும் வீடியோ வெளியிட்டு கோரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து குஷ்பு, மஞ்சிமா மோகன், ஸ்ரேயா கோஷல், ஆர்.கே.சுரேஷ், மாளவிகா மோகனன், ஸ்ருதி ஹாசன், கஸ்தூரி என்று பல நடிகர், நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கத்தில் கொரோனா குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுவாக, அரசு, அரசு அதிகாரிகள் சொல்லும் கேட்காத மக்கள், தாங்கள் உயிருக்கு மேலாக கருதும் நடிகர்கள் சொன்னால், கேட்பார்கள்.

அப்படியிருக்கும் பட்டியலில் சிம்பு, அஜித், விஜய், சத்யராஜ், சிபிராஜ் என்று பலரும் இருக்கின்றனர்.

அவர்கள் தங்களுக்கு என்ன வந்தது என்று சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஒதுங்கியிருக்கின்றனர்.

அஜித் சினிமாவில் நடிப்பதோடு சரி, வெளியில் எங்கும் செல்வதில்லை. சமூக வலைதள பக்கமும் கிடையாது.

அவர் உண்டு, அவரது நடிப்புண்டு என்று இருக்கிறார். ஆனால், அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்க ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால், விஜய் அப்படியில்லை. சினிமாவில் நடித்துவிட்டு, பட நிகழ்ச்சிகளிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வார்.

தேவைப்படும் பொழுது ரசிகர்களாக பேசுவார். ஆனால், தற்போது வரை கொரோனா வைரஸ் குறித்து விஜய் இதுவரை வீடியோ எதுவும் வெளியிடவில்லை.

இது அவர்களது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் அளிக்கிறது. ரசிகர்கள் மீது அக்கறை கொண்டு அஜித், விஜய் போன்ற நடிகர்கள் கொரோனா குறித்தும், ரசிகர்களின் குடும்பத்தின் மீது பாசம் வைத்து வீடியோ வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SOURCER SIVAKUMAR
Previous article26.03.2020 – இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள்
Next article50 லட்சம் இன்சுரன்: விசாயிகளுக்கு ரூ.2000; அரிசி பருப்பு இலவசம் – நிர்மலா சீதாராமன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here