Home சினிமா மிரட்டும் ஸோம்பி.. வெளியானது ‘ட்ரெயின் டு புசான் 2 : பெனின்சுலா’ டீசர்!

மிரட்டும் ஸோம்பி.. வெளியானது ‘ட்ரெயின் டு புசான் 2 : பெனின்சுலா’ டீசர்!

397
0

Train To Busan 2 : தென் கொரியாவில் 2016-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ட்ரெயின் டு புசான்’ (Train To Busan). இந்த படத்தை பிரபல இயக்குநர் இயோன் சாங்-ஹோ இயக்கியிருந்தார். இப்படம் சூப்பர் ஹிட்டானது. தற்போது, இதன் சீக்குவலாக ‘ட்ரெயின் டு புசான் 2 : பெனின்சுலா’ (Train To Busan 2 : Peninsula) என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

ஸோம்பி த்ரில்லர் ஜானர் படமான இதனையும் இயோன் சாங்-ஹோவே இயக்கி கொண்டிருக்கிறார். இதில் முக்கிய வேடங்களில் கேங் டோங்-வான், லீ ஜங்-ஹியூன், லீ ரீ, க்வோன் ஹே-ஹ்யோ, கிம் மின்-ஜெய், கூ கியோ-ஹ்வான், கிம் டு-யூன், லீ யே-வான் ஆகியோர் நடித்துள்ளனர்.

தற்போது, ‘ட்ரெயின் டு புசான் 2 : பெனின்சுலா’ (Train To Busan 2 : Peninsula) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலையும் எகிற வைத்துள்ளது. ‘ட்ரெயின் டு புசான் 2 : பெனின்சுலா’ (Train To Busan 2 : Peninsula) படத்தை இந்த ஆண்டு (2020) ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Previous articleகொரோனா இந்தியா; போனது 4000 கோடி, வந்தது 7600 கோடி
Next articleமனிதநேயம், ஆன்மீகம் ஆகியவற்றின் மகத்துவத்தை செயலில் காட்ட வேண்டிய நேரம்: ரஹ்மான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here