Home சினிமா கோலிவுட் விஜய்யுடன் சேர்ந்து கட்சி துவங்க திட்டமா?- வரலட்சுமி அதிரடி

விஜய்யுடன் சேர்ந்து கட்சி துவங்க திட்டமா?- வரலட்சுமி அதிரடி

515
0
விஜய்யுடன்

விஜய்யுடன் சேர்ந்து கட்சி துவங்க திட்டமா? விஜய்யின் புரட்சியே தேவை; சரத்குமார் கட்சியுடன் தொடர்பில்லை என வரலட்சுமி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்

நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. தமிழில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் தைரியமாக நடித்துவரும் நடிகை.

சர்கார் படம் மூலம் அரசியல் கதாப்பாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். தந்தை சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மகளிர் பற்றிய நிகழ்ச்சி ஒன்றில் வரலட்சுமி சரத்குமார் கலந்துகொண்டார். அப்போது அவரின் அரசியல் வருகை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதுகுறித்து வரலட்சுமி கூறியதாவது, அரசியல் படங்களில் நடித்துள்ளேன். அரசியலைப் பற்றியும் நன்கு கற்று வருகிறேன்.

அரசியல் ஒன்றும் கெட்ட வார்த்தையல்ல. மிகச் சரியான நேரத்தில் அரசியலுக்கு நிச்சயம் வருவேன்.

அதேவேளை அப்பாவின் கட்சி, அவரின் அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, தற்போதைய சூழலில் தமிழகத்திற்கு ஒரு விரல் புரட்சியே தேவை எனக்கூறினார்.

ஒரு விரல் புரட்சி என்பது சர்கார் படத்தில் விஜய் செய்யும் புரட்சி ஆகும். அதுதான் தமிழகத்திற்கு தேவை எனவும் கூறியுள்ளார்.

சரத்குமாரின் அரசியலுக்கும் தனக்கும் தொடர்பில்லை எனவும் கூறியுள்ளார். அப்படியாயின் விஜய் கட்சி துவங்கினால் அதில் இணைய வரலட்சுமி முடிவு செய்துள்ளாரோ?

Previous articleஜடேஜா மனைவி ரிவாபா பாஜகவில் இணைந்தார்
Next articleநோபல் பரிசு பெறும் தகுதி எனக்கு இல்லை: இம்ரான் கான்
Editor in Chief & Founder of MrPuyal.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here