Home சினிமா கோலிவுட் நஸ்ரியா நஷீத்தை போல இருக்கும் வர்ஷா பொல்லம்மா பர்த்டே டுடே!

நஸ்ரியா நஷீத்தை போல இருக்கும் வர்ஷா பொல்லம்மா பர்த்டே டுடே!

318
0
HBD Varsha Bollamma

Varsha Bollamma; நஸ்ரியா நஷீத்தை போல இருக்கும் வர்ஷா பொல்லம்மா பர்த்டே டுடே! வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவரான நடிகை வர்ஷா பொல்லம்மா இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகை வர்ஷா பொல்லம்மா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வர்ஷா பொல்லம்மா. கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் குடகு என்ற பகுதியில் பிறந்துள்ளார்.

ராஜா ராணி படத்தில் நஸ்ரியா நஷீத் பேசும் டயலாக்கை பேசி மிகவும் பிரபலமாகியுள்ளார்.

பார்ப்பதற்கு ஒரு சாடையில், நஸ்ரியாவை நஷீத்தைப் போன்று இருப்பதால், சினிமாவில் நடிக்கவும் வந்துள்ளார்.

இயக்குநர் ராஜீவ் பிரசாத் இயக்கத்தில் வந்த சதுரன் என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, வெற்றிவேல், இவன் யாரென்று தெரிகிறதா, யானும் தீயவன், கல்யாணம், மந்தரம், 96, சீமதுரை, பெட்டிக்கடை, பிகில் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது தனது அழகான தோற்றம், நடிப்பு திறமை ஆகியவற்றின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். இந்த நிலையில், இன்று தனது 25ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous articleBlack-and-White Challenge: வைரலாகும் பிரபலங்களின் கருப்பு வெள்ளை புகைப்படங்கள்!
Next articleஉங்கள் அன்பால் திக்குமுக்காடிப் போனேன்: தனுஷ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here