Home சினிமா கோலிவுட் இவர்தான் காலேஜ் டீன்: வைரலாகும் விஜய் ஐடி கார்டு!

இவர்தான் காலேஜ் டீன்: வைரலாகும் விஜய் ஐடி கார்டு!

375
0
Vijay ID Card

Master Vijay ID Card; ஓஓ இவர்தான் தான் காலேஜ் டீனாக்கும்: வைரலாகும் காலேஜ் ஐடி கார்டு! விஜய்யின் ஐடி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய் அணிந்திருக்கும் ஐடி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master Vijay ID Card). வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக வரும் 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாக இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில், மாஸ்டர் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

விஜய்யும் வழக்கம் போல் கதை சொன்னார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவர் கோட் சூட்டில் வந்தார். நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக இவ்வாறு வந்ததாக குறிப்பிட்டார்.

மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால், பலரும் அறியாத ஒன்று அவர், கல்லூரியில் மாணவர்களின் டீன். மாஸ்டர் படத்தில் விஜய் அணிந்திருக்கும் ஐடி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் ஜான் துரைராஜ் என்றும், செயிண்ட் ஜெப்பேரிஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் மாணவர்களின் டீனாக பணியாற்றுகிறார் என்றும் அந்த ஐடி கார்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஐடி கார்டில், விஜய் கண்ணாடி அணிந்திருப்பது போன்ற அவரது பழைய புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleஇவரையும் விட்டு வைக்கவில்லை; கொரோனா கைவரிசை
Next articleஒருவர் திடீர் மயக்கம் அடைய என்ன காரணம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here