Home சினிமா கோலிவுட் விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு!

விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு!

278
0
Vijay Sethupathi Ka Pae Ranasingam

Ka Pae Ranasingam; விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியீடு! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது.

க/பெ.ரணசிங்கம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் பெரிய கருப்பத்தேவர். இவரது மகன் பெ விருமாண்டி இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் க/பெ.ரணசிங்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில், யோகி பாபு, சமுத்திரக்கனி, பூ ராம் ஆகியோர் பலரும் நடித்துள்ளனர். காட்பாடி ஜே ராஜேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். ஜிப்ரான் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு க/பெ.ரணசிங்கம் படம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ராமநாதபுரம் மற்றும் துபாய் ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதமே படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், பல்வேறு காரணங்களால் படம் வெளிவரவில்லை.

இந்த நிலையில், நீண்ட நாட்கள் இடைவெளிக்குப் பிறகு கடந்த மாதம் இப்படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு க/பெ.ரணசிங்கம் படம் திரைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு க/பெ.ரணசிங்கம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரது காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ka Pae Ranasingam

SOURCER SIVAKUMAR
Previous articleமுதல் முறையாக இரட்டை வேடம் எடுக்கும் சிவகார்த்திகேயன்!
Next articleமீண்டும் தொடங்கப்படும் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here