Home சினிமா கோலிவுட் துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!

312
0

Tughlaq Durbar First Look; துக்ளக் தர்பார் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது? அறிவிப்பு வெளியிட்ட படக்குழு! விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 8 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில், மாமனிதன், லாபம், துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, புஷ்பா, யாதும் ஊரே யாவரும் கேளிர், க/பெ.ரணசிங்கம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 8 ஆம் தேதி துக்ளக் தர்பார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் துக்ளக் தர்பார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கோவிந்த வசந்தா இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

துக்ளக் தர்பார் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடித்து வருகிறார். மேலும், பார்த்திபன் இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tughlaq Durbar

Previous articleமது அருந்த ஏ.டி.எம் இல் இருந்து பணத்தை திருட முயற்சி செய்து காவல் துறையிடம் சிக்கிய நபர்: கோவை
Next articleகருப்பன் நடந்து போனா ஊரே அடங்கி நிக்கும்: காளையுடன் கெத்து காட்டிய சூரி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here