Home சினிமா கோலிவுட் விஷாலின் சக்ரா ஓடிடி தளத்தில் வெளியீடு?

விஷாலின் சக்ரா ஓடிடி தளத்தில் வெளியீடு?

274
0
Vishal Chakra Movie

Chakra Release On OTT; விஷாலின் சக்ரா ஓடிடி தளத்தில் வெளியீடு? விஷால் நடிப்பில் உருவாகி வரும் சக்ரா படம் ஓடிடி தளத்தில் வெளியாக வாய்ப்பில்லை என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சக்ரா படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஷால். ஒரு நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.

இதற்காக விஷால் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும், ஒரு இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.

ஆம், துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி வருகிறார். விரைவில், இந்தப் படம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது விஷால், சக்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அறிமுக இயக்குநர் எம்.எஸ். ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும், ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

கே.ஆர்.விஜயாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். விஷால், ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஷாலின் பிலிம் பேக்டரி நிறுவனமே இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 4 மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. பொதுவாக விஷால் படம் தெலுங்கில் மட்டும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்.

தற்போது சக்ரா படம் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இன்று மாலை 5 மணிக்கு சக்ரா டிரைலர் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் உருவாகி வரும் சக்ரா டிரைலரை கார்த்தி மற்றும் ஆர்யாவும், மலையாள டிரைலரை மோகன்லாலும், தெலுங்கு டிரைலரை ராணாவும், கன்னட டிரைலரை யாஷூம் வெளியிட உள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க, பொன்மகள் வந்தாள், பென்குயின் ஆகிய படங்களைப் போன்று சக்ரா படமும் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. ஓடிடி குழுவினர் சக்ரா படக்குழுவினரை அணுகியுள்ளனர்.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பட்ஜெட் கட்டுப்பாடுகளை காரணம் காட்டி சக்ரா படத்தை திரையரங்கில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleகொல்லவும் செய்வோம்: செய்து காட்டிய காவல்துறையினர் தண்டிக்கப்பட வேண்டும்!
Next articleவட இந்தியாவில் தொடர்ந்து பயிர்களை நாசம் செய்யும் பாலைவன வெட்டுகிளிகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here