Home சினிமா கோலிவுட் என்னது கேஜிஎஃப் 2 டிரைலர் இல்லையா? மீண்டும் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலமா?

என்னது கேஜிஎஃப் 2 டிரைலர் இல்லையா? மீண்டும் பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலமா?

3418
0
KGF 2 No Trailer

KGF 2 Trailer; யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகாது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கேஜிஎஃப் 2 படத்திற்கு டிரைலர் இல்லை என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கேஜிஎஃப் (KGF) படத்தின் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகர் யாஷ். கன்னடத்தில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

பிறக்கும் போது ஏழையாக பிறந்து, சாகும் போது பணக்காரனாகத்தான் சாகணும் என்று அம்மா சத்தியம் வாங்குகிறார்.

தன் அம்மாவின் சத்தியத்திற்காக பணக்காரனாக துடிக்கும் சிறுவன் ராக்கி கேங்க்ஸ்டராக மாறுகிறார். தங்கச்சுரங்கத்தை ஆட்டிப்படைக்கும் வில்லனை கொல்வதற்காக துணிச்சலோடு அவரது இடத்திற்கே செல்கிறார்.

அங்கிருக்கும் ஏழை கொத்தடிமை மக்களைக் கண்டு உணர்ச்சிவசப்படுகிறார். இறுதியில், வில்லனை கொன்று குவிக்கிறார். ஒவ்வொரு காட்சியையும் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கும் படி இயக்கியிருந்தார் இயக்குநர்.

அந்தளவிற்கு படத்தின் காட்சிகள் கட்சிதமாக இருந்தது. ரொமான்ஸ், ஆக்‌ஷன், சென்டிமெண்ட் என்று எந்த இடத்திலும் குறையில்லாத படமாக கேஜிஎஃப் உருவாக்கப்பட்டிருந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கேஜிஎஃப் 2-ஆம் (KGF 2 Release Date) பாகமும் உருவாகியுள்ளது.

அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வரும் அக்டோபர் 23-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கேஜிஎஃப் 2 (KGF 2 Release Date) படத்தில் யாஷிற்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்துள்ளார். மேலும், யாஷிற்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். அவருடன் இணைந்து ரவீனா டாண்டன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கேஜிஎஃப் 2 படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

இது குறித்து தயாரிப்பாளர் கார்த்திக் கவுடா, டுவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ரிலீஸ் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது.

ஆகையால், கேஜிஎஃப் 2 நேரடியாக திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்றும், அதற்கு முன்பாக டிரைலர் வெளியிடும் திட்டமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படக்குழுவினரின் இந்த அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பிளாக் அண்ட் ஒயிட் காலகட்டத்தில் டிரைலர் எல்லாம் கண்டுபிடிக்கப்படவில்லை. அப்போது எல்லாம் படங்கள் நேரடியாக திரையரங்குகளில் தான் வெளியிடப்பட்டது.

அப்படி வெளியான படங்களை ரசிகர்கள் 100 நாட்களுக்கும் மேலாகவே ஓட வைத்தனர்.

ஆனால், இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட காலகட்டத்தில் டிரைலர், டீசர், சாங்ஸ், டைட்டில் டீசர் என்று அனைத்தையும் படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.

அப்படி வெளியிடும் போதே அதிலுள்ள தவறை கண்டறிந்து சர்ச்சையை ஏற்படுத்திவிடுகின்றனர்.

இந்த நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தும் நோக்கத்தில் படத்தின் டிரைலரை வெளியிடும் திட்டமில்லை என்று தெரிவித்துள்ளது.

பழைய முறையை கேஜிஎஃப் 2 படக்குழுவினர் பின்பற்ற திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleதென்கொரியாவில் ஒற்றை இலக்கத்திற்க்கு வந்தது கொரோனா பாதிப்பு!
Next articleதமிழகத்தில் 2 பத்திரிக்கையாளர் உட்பட 1,477 கொரோனா தொற்று!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here