கண்ணனுக்குத் தெரியாத சுள்ளான் கொரோனா வைரஸ் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது பங்குச்சந்தை-யில் 5 லட்சம் கோடி அவுட்.
இன்று காலை வர்த்தக நேரத் துவக்கத்தில், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1515.01 புள்ளிகள் சரிந்தது. 36,061.61 என்ற நிலவரத்தில் சந்தை ஆரம்பம் ஆனது.
நிப்டி 417.05 புள்ளிகள் சரிந்தது 10,572.40 என வர்த்தம் ஆரம்பம் ஆனது. மதியம் 1 மணி அளவில், சென்செக்ஸ் 2200 புள்ளிகளும், நிப்டி 620 புள்ளிகளும் அதிரடியாக சரிவை சந்தித்தன.
கொரோனா வைரசால் கச்சா எண்ணை விலையும் கடும் வீழ்ச்சி கண்டு உள்ளது. மேலும் எஸ் வங்கி சரிவை சந்தித்துள்ளது. இதன் தாக்கம் பங்குசந்தையில் எதிரொலித்தது.
இந்த சரிவால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு 5 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டு உள்ளது.