எடப்பாடி ஆட்சியில் பல டெட்பாடிகள்: இந்த அவலம் தேவை தானா? அமைச்சர் தங்கமணியும் அரச கஜானாவும்! டாஸ்மாக் விலை உயர்வு ஒரு பார்வை.
குடிமக்களுக்கு ஓர் சோகமான செய்தி ஆமாம்ப்பா நிஜமாவே குடிமக்களுக்குத்தான், குடிக்கும் மக்களுக்கு. அரச கஜானாவை நிரப்ப உங்க குடியில கை வச்சிட்டாங்கப்பா சரக்கு விலையை ஏத்திட்டாங்கோவ்
மது விலை உயர்ந்தால் தமிழக அரசுக்கு ரூ.2500 கோடி வருவாய் கிடைக்கும்ன்னு அமைச்சர் தங்க மணி பேட்டி கொடுத்துள்ளார்.
மதுவிலை ஏற்றம்
தமிழகம் முழுக்க 5,300 மதுக்கடைகளை தமிழக அரசே டாஸ்மார்க் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
இதன் மூலம் வருடத்திற்கு 25 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானமும் கிடைக்கிறது. விழாக்காலங்களில் இந்த வருவாய் இரண்டு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்த வருவாயைத் தான் அரசு பல முக்கியத் திட்டங்களுக்குச் செலவு செய்வதாக கூறிவருகிறது.
இந்நிலையில் 2017-ம் ஆண்டு மது பாட்டில்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
அமைச்சர் தங்கமணி கூறியதாவது,
டாஸ்மாக் விலை உயர்வு. மது விலை உயர்வு குறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆண்டு ஒன்றுக்கு மது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 5 கோடி செலவு ஆகின்றது.
அதனால் மதுவிலை உயர்வு மூலம் 2500 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் கூறினார். இந்த ஆண்டு மின் உற்பத்தி அதிகமானதால் மின் தட்டுப்பாடு இருக்காது எனவும் கூறினார்.
எடப்பாடி ஆட்சியில் பல டெட்பாடிகள்
5 கோடி செலவுக்கு 2500 கோடி மூலம் ஈடுகட்ட நினைக்கின்றது அரசு. இதற்கு அந்த மதுபானக் கடைகளை மூடி விட்டால் என்ன?
குடி உடல் நலத்திற்கு கேடு என அந்தப் பாட்டிலில் எழுதி வெளியிடுகின்றனர். சினிமா படங்களில் இடம்பெறச் செய்கின்றனர்.
பள்ளி பாடப்புத்தகத்தில் கூட உள்ளது. இவ்வளவு விழிப்புணர்வு செய்தும் குடிப்பழக்கம் ஒழிந்ததா? இல்லையே பள்ளி மாணவிகள் பீர் பாட்டிலுடன் டிக்டாக் செய்யும் அவலம் அரங்கேறி உள்ளது.
அரசு கஜானாவை நிரப்ப, சாராயம் விற்கலாம். தமிழகத்தையே குடிக்க வைத்து அழிக்க நினைக்கலாம். அது தவறில்லை. ஒரு சினிமாவில் காட்சி இடம் பெற்றால் அது தவறாம்.
சரி, சரக்கு விலையை ஏற்றினால் குடிமகன்கள் திருந்தி விடுவார்களா? குடுக்க கூடுதலாக பணம் கேட்டு மனைவியும், குழந்தைகளையும் துன்புறுத்தும் அவலம் நிச்சயம் அதிகமாகும்.
எடப்பாடி ஆட்சியில் பல டெட்பாடிகள் என்று நாளைய வரலாறு பேசும். இந்த அவலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவை தானா?