அபிடின் டினோ 106-வது பிறந்த தினம் – கூகுள் டூடுல்
இன்றைய கூகுள் டூடுலில் அபிடின் டினோ என்ற துருக்கி நாட்டவரின் பிறந்த தினத்தை கூகுள் நிறுவனம் டூடுல் மூலம் சிறப்பித்துள்ளது.
அபிடின் டினோ வரலாறு (Abidin Dino)
அபிடின் மார்ச் 23, 1913-ம் வருடம் துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நகரில் பிறந்தார். இவருடைய குடும்பமே கலையை ரசிக்கக்கூடிய குடும்பம்.
இதனால் சிறுவயதிலேயே அவரது குடும்பத்தினர் உதவியுடன் ஓவியம் வரையத் துவங்கினார். மேலும் அவர் ஜெனிவா, சுவிஸ்லாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குப் பெற்றோருடன் சென்றார்.
வெளிப்பாடு, யதார்த்தம் மற்றும் சர்ரியலிசம் ஆகியவற்றின் கலவையை உள்ளடக்கிய இவரின் ஓவியங்கள் ஸ்பெயினின் அருங்காட்சியகங்களின் சுவர்களை அலங்கரித்தது.
தன்னுடைய 20 வயதில் டினோ, ஐந்து புதுமை புகுத்தும் ஓவியர்களுடன் இணைந்து ‘டி குரூப்’ என்ற இயக்கத்தை உருவாக்கினார்.
இஸ்தான்புல்லில் நடைபெற்ற துறைமுக கண்காட்சியில் பங்குகொண்டு அங்கு ஏற்கனவே பிரபலமாக இருந்த மீனவர்களைத் தத்ரூபமாக வரைந்து அசத்தினார்.
இரண்டாம் உலகப்போரின்போது இவர் வரைந்த அரசியல் ஓவியங்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
ஆனால் அது இஸ்தான்புல் ராணுவத்திற்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தென்கிழக்கு அனடோலியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
1979-ஆம் ஆண்டில் டினோ, விஷுவல் ஆர்ட்ஸ், யுஎன்ஏபி-யின் பிரெஞ்சு தேசிய ஒன்றியத்தின் கௌரவத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
டிசம்பர் 7 1993-ஆம் ஆண்டு மறைந்தார். அவரின் மறைவிற்கு பிறகு அவருடைய ஓவியத்தை “குசின்ஸ் அபிடின்ஸ்” என்ற புத்தகமாக அவரது மனைவி வெளியிட்டார்.
எனவே அவரின் பிறந்த தினத்தை கூகுள் டூடுல் சிறப்பித்துள்ளது.