Home ஜோதிடம் 11/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

11/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

924
0
11/2/2020 ராசிபலன் இன்றைய தின ராசிபலன் மேஷம் மீனம் Horoscope Tamil

11/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகக் காணப்படுகிறது. இதுவரை இருந்த கல்யாணத்தடை விலகி சுபமுண்டாகும். அவ்வப்போது மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடலாம். தாயாரின் உடல்நலத்தைப் பேணுவது அவசியமாகும்.

அதிர்ஷ்ட எண்: 7அதிர்ஷ்ட நிறம்: ஊதா வண்ணம்.

ரிஷபம் ராசிபலன்

மிகவும் தனவரவு மிகுந்த நாளாகக் காணப்படுகிறது. ராசிநாதன் உச்சம் பெற்றுள்ளதால் எதிலும் வெற்றி வாகை சூடலாம். காது சம்மந்தப்பட்ட கோளாறு வத்து நிவர்த்தியடையும். பொறுமையாக எதிலும் ஈடுபடுவது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மிதுன ராசிபலன்

மிகவும் தையரிமான நாளாகக் காணப்படுகிறது. பாக்கிய நாதன் உச்சத்தில் இருப்பதால் பூர்வ புண்ணிய பலன் கூடும். கோபத்தைக் கட்டுப்படுத்தி இருக்க வேண்டிய நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு வண்ணம்

கடக ராசிபலன்

சுபமான நாளாகக் காணப்படுகிறது. மனைவி வழி உறவினர்களிடையே பகைமை கொள்ளக் கூடாது. மனைவியை அன்போடு அனுசரனையாக நடந்து கொள்வது அவசியமாகும். காது, மூக்கு, தொண்டை தொடர்பான பிரச்சனை வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

சிம்மம் ராசிபலன்

ராசியிலேயே சந்திரன் உலவுவதால் சிறு சிறு மனக் குழப்புங்கள் வரக்கூடும். பெண்களுக்கு குடும்பத்தில் அதிகாரம் ஓங்கும். தங்கு தடையற்ற லாபம் பெருகும் நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மரகத வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

கன்னி ராசிபலன் 

சந்திரன் பன்னிரெண்டில் உலவுவதால் சற்று விரயம் இருக்கும். செலவினங்களைக் குறைப்பது அவசியம். யோகமான நாளாகக் காணப்படுகிறது. தந்தை, தாய் வழி உறவினர்களின் மகத்துவமான உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம், அதிர்ஷ்ட எண்: 2

துலாம் ராசிபலன்

மிகவும் அற்புதமான ஆசீர்வாதமான நாளாகக் காணப்படுகிறது. தெய்வங்களின் அனுக்கிரகம் மிகுந்த நாளாகக் காணப்படுகிறது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. இடது காலில் பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. மூளை சம்மந்தப்பட்ட பிரச்சினை ஏற்படலாம் மருத்துவ சிகிச்சை தேவை.

அதிர்ஷ்ட நிறம் : நீல வண்ணம். அதிர்ஷ்ட எண் : 2

விருச்சிக ராசிபலன்

பலரும் ஏறெடுத்துப் பாராட்டும் வண்ணம் பல செயல்கள் செய்து வெற்றி பெறுவீர்கள். நிதானமாக செயல்கள் செய்து புகழ் பெறுவீர்கள். புத்துணர்வோடு செயல்படும் நாள். சிலருக்கு தண்ணீரில் கண்டம் ஏற்படலாம். கவனம் தேவை.

அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 5

தனுசு ராசிபலன்

மிகவும் பாக்யமான நாளாகக் காணப்படுகிறது. வரசித்தி விநாயகரை வழிபடுவது வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும். தவறான கருத்துக்களைச் சொல்ல வேண்டாம். ஏதேனும் சொல்லப் போய் வம்பில் முடியும். மாணவர்கள் கவனமுடன் படிப்பது அவசியம்.

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

மகரம் ராசிபலன் 

சந்திரன் எட்டில் இருப்பதால் கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. தனிநபர் தாக்குதல் செய்யாதிருப்பது மிக அவசியம். நம்பி மோசமடையும் நாளாகக் காணப்படுகிறது. எச்சரிக்கையோடு செயல்படுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம் : பவள வண்ணம், எண் : 9

கும்ப ராசிபலன்

சற்று ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். குழந்தைகளிடத்தில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வீடு விற்றல், பத்திரம் பதிவு செய்தல் போன்றவற்றில் கவனம் தேவை. நல்ல வேலைவாய்ப்பைப் பெறும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண்: 3

மீனம் ராசிபலன் 

தெய்வத்தை வழிபட தீமைகள் விலகும் நாள். கடன் கொடுத்து வசூலிக்க கஷ்டப்படும் நாள். பண விவகாரங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பணம் கொடுத்து ஏமாந்து விடும் நாளாகக் காணப்படுகிறது. ஸ்கின் நோய்கள் வந்து போகலாம்.

அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

11/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

நாளைய 12/2/2020 ராசிபலன்

Previous articleவாழ்வே போராட்டம் இதில் வாழ்வாதாரத்திற்காக போராட்டமா?
Next articleடிரம்ப் இந்தியா வருகை; பிரதமர் மோடி டிரம்பை அழைத்தது ஏன்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here