12/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.
மேஷ ராசிபலன்
இன்றைய நாள் அமைதியாக செல்லும். நாள் முழுவதும் சுமூகமான சூழ்நிலை இருக்கும். துணையிடம் நட்பான அணுகுமுறை அவசியம் தேவையாகும். மற்றபடி சிறந்த நாளாக இருக்கும்.
ரிஷப ராசிபலன்
இன்று கடின உழைப்பால் வெற்றி நிச்சயம் கிடைக்கும். உங்களின் உறுதி மற்றும் நேர்மைக்கு தகுந்த பாராட்டுகள் கிடைக்க போகிறது. தொழிலில் நல்ல லாபகரமான நாளாக இருக்கும்.
மிதுன ராசிபலன்
இன்று மகிழ்ச்சிகரமாக இருக்க போகும் நாளாகும். தொட்ட காரியங்கள் அனைத்தும் ஜெயமாக முடியும் நாளாகும். பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் குறையேதும் இருக்காது.
கடக ராசிபலன்
இன்று நற்பலன்கள் எதுவும் பெரிதாக கிடைக்காது. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். நஷ்டம் ஏற்பட வாய்ப்புண்டு எனவே கூடுதல் கவனம் அவசியமாகும்.
சிம்ம ராசிபலன்
இன்று தாங்கள் அறிவினை பயன்படுத்தி செயலாற்றவும். இல்லையெனில் தேவையற்ற வம்புகள் வந்து சேரும். குடும்ப உறவுகளில் விரிசல் ஏற்பட வாய்ப்புண்டு. பொறுமையாக கையாள வேண்டிய நாளாகும்.
கன்னி ராசிபலன்
இன்றைய நாள் அற்புதமான நாளாக இருக்கும். உங்களின் பணிகள் அனைத்தும் விரைந்து முடியும். கணவன் மனைவியிடையே காதல் அதிகரிக்கும். நல்ல வருமானம் கிடைக்கும் நாளாக இருக்கும்.
துலா ராசிபலன்
இன்று மன உறுதி அவசியம் தேவையான நாளாகும். நம்பிக்கை இழந்து காணப்படுவீர்கள். பணியிடத்தில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. குடும்பத்தில் பூசல்கள் ஏற்படலாம்.
விருச்சிக ராசிபலன்
இன்று மிதமான பலன்களை தரும் நாளாக இருக்கும். வாகனங்கள் பயணிக்கும் போது கவனமாக இருக்கவும். துணையிடம் நட்பாக நடந்து கொள்ள வேண்டிய நாளக இருக்கிறது.
தனுசு ராசிபலன்
இன்று உங்களின் லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய நட்பினால் பயன் பெறுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மகர ராசிபலன்
இன்று நீங்கள் அதிக சுறுசுறுப்பாக இருப்பீர்கள். உங்களின் காதலில் வெற்றி காணும் நாளாக இருக்கிறது. தொழிலில் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணப்புழக்கம் சிறப்பாக இருக்கும் சேமிப்பு அவசியம்.
கும்ப ராசிபலன்
உங்களிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை அவசியம் இன்று வேண்டும். பணியில் சற்று கவனம் செலுத்தாமல் இருப்பீர்கள். அதனால் சில பிரச்சனைகள் வரும். வீட்டில் அமைதியின்மை நிலவும். வெளியூர் பயணங்களை தவிர்க்க வேண்டிய நாள்.
மீன ராசிபலன்
இன்று ஆன்மீக ஈடுபாட்டில் கவனம் செலுத்தவும். அதனால் நற்பலன்கள் அடைவீர்கள். தொழில் திருப்தியாக இருக்க வாய்ப்புகள் குறைவு. வீட்டில் கடன் பிரச்சனைகள் ஏற்படலாம். கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
12/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.