Home ஜோதிடம் 18/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

18/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

562
0
18/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

18/2/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

கல்வியில் நல்ல முன்னேற்றம் காணும் நாள். வியாபாரிகளுக்கும் பெரும் லாப முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் அசௌகரியங்கள் தீரும்.

அதிர்ஷ்ட எண்: 9; அதிர்ஷ்ட நிறம்: மரகதம்

ரிஷபம் ராசிபலன்

சிறந்த வகையிலான தகவல் தொடர்புத் துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம். இளைஞர்களுக்கு கணினித் துறையில் வேலை கிட்டும்.

நண்பர்களோடு பேசுகையில் நிதானம் தேவை. விளையாட்டு விபரீதமாகலாம்.

அதிர்ஷ்ட நிறம்: தேன்வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 2

மிதுன ராசிபலன்

நல்ல தனவரவுடைய நாளாகக் காணப்படுகிறது. நிதானமான போக்கு தேவைப்படுகிறது. வேலை பார்க்குமிடத்தில் மேலதிகாரியை பகைத்தல் கூடாது.

அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம்; காக்கி வண்ணம்.

கடக ராசிபலன்

எதிலும் சற்று கவனம் தேவை. வெற்றியடையும் நாளாகக் காணப்பட்டாலும் சிறிது வேலைப்பளு அதிகம் இருக்கும். பொறுமையுடன் வேலையில் ஈடுபடுவது சாலச் சிறந்தது.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா வண்ணம், அதிர்ஷ்ட எண் : 7

சிம்மம் ராசிபலன்

நல்ல நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. தாய் தந்தையரின் நலத்தைக் கவனித்துக் கொள்வது மிக அவசியம்.

தந்தையாரின் உடல்நலத்தைப் பேணுவது சிறந்தது. உங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்; அதிர்ஷ்ட எண் : 3

கன்னி ராசிபலன் 

மிகச் சிறந்த லாபகரமான நாளாகக் காணப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் பெருமைகள் கூடி வரும். பெண்களுக்கு மாமியாரால் பிரச்சனை உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: அடர்சிகப்பு; அதிர்ஷ்ட எண்: 9

துலாம் ராசிபலன்

அதிர்ஷ்டம் கொட்டும் நாள். எந்த வாய்ப்புகள் வந்தாலும் தவிர்க்காமல் ஏற்றுக் கொள்வது நலம்.

சிறிய வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக அந்த வேலையைச் செய்து காட்ட வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.

அதிர்ஷ்ட நிறம் : மரகத வண்ணம்; அதிர்ஷ்ட எண் : 5

விருச்சிக ராசிபலன்

தந்தைவழி உறவுகளால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டு தொடர்பான அனைத்து விஷயங்களும் வெற்றி பெறும். வியாபாரத்தில் வெற்றி உண்டு. தூரதேசத்தில் வசிப்பவர்கள் பற்றிய பயம் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ரோஜா வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 6

தனுசு ராசிபலன்

இன்று நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவீர்கள். நண்பர்களுடன் உணர்ச்சிவசமாகப் பேசி மகிழ்வீர்கள். அதேநேரம் உணர்ச்சிவசப்படாமல் அறிவுக்கு வேலை கொடுத்து பணியாற்றினால் இன்று எதிலும் வெற்றி கிட்டும்.

அதிர்ஷ்ட நிறம்: முத்து வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 2

மகரம் ராசிபலன் 

நண்பர்களிடத்தில் உள்ள பகைமையை மறந்து மனம் களிக்க வேண்டிய நாள். அவசரப்பட்டு நல்ல நண்பர்களை இழந்து விட வேண்டாம். எதிலும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாளாகக் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம்: மாணிக்க வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 1

கும்ப ராசிபலன்

மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். ஆறுபடை முருகன் வீட்டில் ஒன்றை வழிபடுவது நல்லது. வெளிநாட்டில் இருப்போர் ஓம் சரவணபவ என உச்சரித்தால் உயர்வடையலாம்.

அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை வண்ணம்; அதிர்ஷ்ட எண்: 5

மீனம் ராசிபலன் 

பூர்வ புண்ணிய அனுக்கிரகம் முழுமையாகக் கிடைக்கக் கூடிய நாள். எல்லா அதிர்ஷ்டமும் கிடைக்கக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. குலதெய்வ வழிபாடு இன்னும் குதூகலத்தை அதிகப்படுத்தும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 6

18/2/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

Previous articleமகா சிவராத்திரி உருவான கதை – Maha Sivarathiri Tamil
Next articleNjan prakashan: ஞான் பிரகாஷன் படம் பற்றி ஒரு பார்வை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here