இன்றைய முக்கிய தலைப்பு செய்திகள்
அவசியம் இல்லாமல் வெளியே வந்தால் நீதிமன்றம் அதற்கு உதவ முடியாது ஊரடங்கு உத்தரவை மீறி அவசியமில்லாமல் வெளியில் வந்தால் நீதிமன்றம் ஒன்று செய்ய முடியாது.
உதவியாளர் க்கு வைரஸ் பாதித்ததாக இஸ்ரேல் பிரதமர் தனியாக வைக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேர் குணமடைந்துள்ளனர் சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றம்.
மருத்துவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் பணியாற்ற வேண்டும் டெல்லி அரசு உத்தரவு.
ஈரோட்டில் ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா தொற்று.
இப்போது இருக்கும் சூழலில் பள்ளி கட்டணங்களை உடனடியாக கட்டச் சொல்லி நிர்பந்திக்கும் கல்வி நிலையங்களை கிரிமினல் வழக்கு தொடரப்படும் என கர்நாடக கல்வித்துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சமோசாக்களை கேட்ட இளைஞர்.
சீர்காழியில் கரோனா வைரஸ் பாதிப்பால் வெகுவிமர்சையாக நடைபெறவிருந்த கல்யாணம் 15 உறவினர்கள் மட்டும் பங்குபெற்று மணமகன்கள் உட்பட அனைவரும் சாதாரணமாக மாஸ்க் அணிந்து நடைபெற்றன.
தேனி உழவர் சந்தையில் 18 வகையான காய்கறிகள் அனைத்தும் ஒரு பையாக வைக்கப்பட்டு அதன் விலை வெறும் 150 ரூபாயாக விற்கப்பட்டது.
சீனாவில் மீண்டும் நாய், பூனை, வவ்வால் கறி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தன்னுடைய பணிக்காக 20 மணிநேரம் நடந்தே சென்று பணியில் சேர்ந்தார் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 22 வயதான constable திக்விஜய் ஷர்மா.
பிப்ரவரி மாதத்தில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 38 சதவீதம் குறைந்தது என்று கவுன்டர்பாயின்ட் கருத்துக்கணிப்பு.
பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இணைந்து நிதி வழங்கினார்.