Home நிகழ்வுகள் இந்தியா Corona virus : ரோகித் சர்மா நிதி வழங்கி உள்ளார்

Corona virus : ரோகித் சர்மா நிதி வழங்கி உள்ளார்

281
0

கொரோனா வைரஸ் தடுக்க பிரதமர் கொண்டதால் நேற்று வீராத் கோலி நிதி கொடுத்து நிலையில், இன்று வீரர் ரோகித் சர்மா நிதி வழங்கி உள்ளார்.

உலகத்தையே உலுக்கி வரும் இந்த கொரோனா வைரஸ் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்து வருகிறது. பல லட்சம் மக்களை பாதிப்படையச் செய்கிறது.

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஸ்தம்பித்துள்ளது. பெரிய இழப்புகளையும் சந்திக்க நேரிட்டுள்ளது.

ஜெர்மனி நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதார இழப்பால் நிதியமைச்சர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஸ்பெயின் நாட்டு இளவரசி (86 வயது) கொரோனா தொற்றால் காலமானார்.

பிரதமர் பிரிட்டன், பிரிட்டன் இளவரசர் போன்றவர்களின் இந்த கொரோனா  விட்டுவைக்கவில்லை.

மோடி நேற்று தொலைக்காட்சியில் தோன்றி மக்களிடம் உங்களால் முடிந்த நிதியை எங்களுக்கு தாருங்கள் என்று கேட்டு இருந்தார்.

அதற்கு டாடா குழுமம் 1500 கோடி ,நடிகர் அக்ஷய்குமார் 25 கோடி, சச்சின் டெண்டுல்கர் 50 லட்சம், பிசிசிஐ 51 லட்சம், ரகானே 10 லட்சம், ரெய்னா 52 லட்சம்
என பலரும் தங்களது நிதியை நன்கொடையாக கொடுத்து வருகின்றனர்.

நேற்று வீராத் கோலி தொகையை ஏதும் குறிப்பிடாமல் டுவிட்டரில் பிரதமரின் நிதிக்கு உதவி விட்டதாக அறிவித்து இருந்தார்.

அவர் மூன்று கோடி கொடுத்ததாக தகவலும் வெளியாகின ஆனால் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.

தற்போது இந்தியாவின் தொடக்க மற்றும் அதிரடி ஆட்டக்காரர் மும்பையை சேர்ந்த ரோகித் சர்மா கொரோனா வைரஸ் தடுப்பதற்கு பிரதமர் நிதிக்கு 80 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.

Previous articleஇன்றைய முக்கிய செய்திகள் 31.03.2020
Next articleகேஎஸ் ரவிக்குமாருக்கு உதவி இயக்குநராக நடித்த ஜனனி ஐயர் பர்த்டே டுடே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here