Home சினிமா கோலிவுட் கேஎஸ் ரவிக்குமாருக்கு உதவி இயக்குநராக நடித்த ஜனனி ஐயர் பர்த்டே டுடே!

கேஎஸ் ரவிக்குமாருக்கு உதவி இயக்குநராக நடித்த ஜனனி ஐயர் பர்த்டே டுடே!

508
0
Janani Iyer Birthday

Janani Iyer; கேஎஸ் ரவிக்குமாருக்கு உதவி இயக்குநராக நடித்த ஜனனி ஐயர் பர்த்டே டுடே! ஜனனி ஐயர் இனறு தனது 31 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னையில் உள்ள கத்திவாக்கம் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி பிறந்தவர் ஜனனி ஐயர். பிராமின் குடும்பத்தைச் சேர்ந்த ஜனனி ஐயர் படிக்கும் போதே மாடலிங்கும் செய்து வந்துள்ளார்.

இதன் மூலம் கிட்டத்தட்ட 150 விளம்பரங்களில் நடித்துள்ளார். திரு திரு துறு துறு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

ஆனால், இந்தப் படத்தில் அவரது ரோல் பேசப்படவில்லை. இதே போன்று சிம்பு, த்ரிஷா நடிப்பில் வந்த விண்ணைதாண்டி வருவாயா படத்தில் இயக்குநராக நடித்த கேஎஸ் ரவிக்குமாருக்கு உதவி இயக்குநராக ஜனனி ஐயர் நடித்தார்.

இந்தப் படமும் அவருக்கு பேசப்படவில்லை. அப்போதுதான் பாலாவின் அவன் இவன் படம் கைகொடுத்தது. இந்தப் படத்தில் போலீசாக நடித்திருந்தார்.

தொடர்ந்து, தெகிடி, அதே கண்கள், முப்பரிமாணம், பலூன், விதி மதி உல்டா, தர்மபிரபு என்று பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தொல்லைகாட்சி, வேழம், கசட தபற ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

விஷால் உடன் மட்டும் ஜனனி ஐயர் நடித்துள்ளார். அஜித், விஜய், சிவார்த்திகேயன், தனுஷ், விஜய் சேதுபதி, விக்ரம் என்று எந்த நடிகருடனும் ஜனனி ஐயர் ஜோடி சேர்ந்து நடிக்கவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

கிட்டத்தட்ட 9 வருடங்களாக சினிமாவில் நடித்து வரும் ஜனனி ஐயர் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபங்கள், நண்பர்கள் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் ஜனனி ஐயருக்கு நாமும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். ஹேப்பி பர்த்டே ஜனனி ஐயர் மேம்…

SOURCER SIVAKUMAR
Previous articleCorona virus : ரோகித் சர்மா நிதி வழங்கி உள்ளார்
Next articleகொரோனா வைரஸ் : முதல் நபரை கண்டு பிடித்தது சீனா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here