சீனாவில் கொரோனா வைரஸ் பாதித்த முதல் நபரான வுகான் மாகாணத்திலுள்ள சந்தையில் இருந்த சியங் ஜிஸ்யான் என்பவரை கண்டுபிடித்து உள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகமெங்கும் பரவி 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை கொன்று பல லட்சம் மக்களை பாதித்து வருகிறது.
இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகள் குறைவான வைரஸ் ஸ்தம்பித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுபடுத்த முடியாமல் அந்த நாட்டு அரசாங்கங்கள் தவித்து வருகிறார்கள்.
சீனாவை விட உயிர் பலிகளின் இத்தாலி அதிகமாக உள்ளது. சீனாவை விட மக்கள் பாதிப்பில் அமெரிக்கா எண்ணிக்கையில் தாண்டியுள்ளது.
இந்தியாவின் பிரதமர் பல முன்னெச்சரிக்கைகள் எடுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்து மக்கள் சுய ஊரடங்கு இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
பல நாட்டு அரசாங்கங்கள் ஆறு மாதத்திற்கு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
சீன நாட்டில் வுகான் மாகானத்தில் உள்ள குவானன் சந்தையில் தான் பிராணிகள் மூலம் மனிதர்களுக்கு முதல் முறையாக பரவியுள்ளது.
அந்த சந்தையில் இறால் விற்பனையாளர் 57 வயதான சியங் ஜிஸ்யான் (zhang jixian) என்பவருக்கு 2019ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி இருமல் மற்றும் சளி தொல்லை ஏற்பட்டுள்ளது.
இரண்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால், வுகானில் உள்ள யூனியன் மருத்துவமனைக்கு டிசம்பர் 16ஆம் தேதி சென்றுள்ளார்.
அங்குள்ள மருத்துவர்கள் இவரை போன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனை வருவதாக கூறியுள்ளனர்.
குவானன் சந்தையிலிருந்து இந்த கொரோனா வைரஸ் பரவுவதை அறிந்தது சீன அரசு.
ஒருமாத காலம் சிகிச்சை பெற்று வந்த சியங், ஜனவரி மாத இறுதியில் கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளார்.
சந்தையில் இருந்த பொது கழிவறையை பயன்படுத்தியதன் மூலம், எனக்கு இந்த வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என்றும், தன்னோடு இருந்த உறவினர்களுக்கும் இந்த குறைவான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த சந்தையில் தொடர்பு இருந்த கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட 24 பெயர்களில் இவரும் ஒருவர் என வுகான் மருத்துவ ஆணையம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இவரே ஒருவேளை முதல் நபராக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.