சச்சினை விட ரோஹித் சிறந்த வீரர் சைமன் டவ்லின் சர்ச்சைக் கருத்து. ரோஹித் ஷர்மா சச்சினை விட சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என சைமன் டவ்ல் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த வீரர்களில் ஒருவராக உருபெற்றிருக்கும் ரோஹித் சர்மா தனது பேரில் மூன்று இரட்டை சதங்களை வைத்துள்ளார். ஒரு இன்னிங்ஸ் அதிகபட்ச ஸ்கோர் 264 அடித்துள்ளார்.
2013ஆம் ஆண்டில் தோனியின் திடுக்கிடும் முடிவால் அவர் தொடக்க ஆட்டக்காரராக மாற்றப்பட்டார். அன்று தொட்ட அதிர்ஷ்டம் இன்றைக்கு அவர் உச்சத்தில் இருக்கிறார்.
இந்நிலையில் அவரை முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சச்சினோடு ஒப்பிடும் போக்கு இப்போது அதிகரித்துள்ளது.
இருவரை ஒப்பிட்டு சைமன் டவ்லின் கூறியது, ‘சச்சின் டெண்டுல்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் முதன் முதலில் இரட்டைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை எட்டினார்.
எனவே, சச்சின் டெண்டுல்கரை விட ரோஹித் சர்மாதான் சிறந்த ஒரு நாள் கிடிக்கெட் போட்டியின் தொடக்க ஆட்டக்காரர்’ என சைமன் ட்வ்ல் தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து முரண்பாடக இருந்தாலும் ஒரு வீரர் மற்ற வீரருடன் ஒரு வகையில் சிறப்பாகவும் அல்லது குறைவாகவும் காணப்பட்டாலும் இருவரும் தனி தனி திறமைகள் கொண்டிருப்பார்கள்.