டாஸ்மாக் திறக்கப்படுமா ? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
தமிழகத்தில் டாஸ்மாக் திறக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோன வைரஸ்:
கொரோன வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் மதுபான கடைகள் கடந்த மார்ச் 24 தேதி முதல் மூடப்பட்டுள்ளன .
தமிழகத்தின் வருவாயில் முக்கிய பங்கை கொண்டுள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் தமிழக அரசு சொல்லொண்ணா துயரத்தை சந்தித்து வருகிறது .
உயர்நீதிமன்றம் அனுமதி:
எனினும் கடந்த 7 தேதி முதல் கடைகளை திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி அளித்ததை தொடர்ந்து பல்வேறு நிபந்தனைகளுடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் இரு நாட்கள் மட்டுமே இயங்கியது.
திறக்க தடை:
நிபந்தனைகளை மீறியதாக கூறி டாஸ்மாக் கடைகளை திறக்க மீண்டும் 9 முதல் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .
டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு:
எனவே உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை எதிர்த்து கடந்த 10 தேதி டாஸ்மாக் நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை விசாரணைக்கு வர உள்ளது .
கேவியட் மனு:
குறித்த வழக்கின் விசாரணையில் தங்களையும் ஒரு தரப்பாக இணைக்க கோரி மக்கள் நீதி மய்ய தலைவர் கமலகாசன் உள்பட பல்வேறு தரப்பினர் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
ஏற்கனவே மதுபான பிரச்சினையில் பல்வேறு நெறிமுறைகளை உச்சநீதிமன்றம் வகுத்துள்ளதால் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி கிடைப்பது சந்தேகம் என அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் .