Home Latest News Tamil நான்காவது கட்ட ஊரடங்கு ? தொழிலதிபர்களிடம் முதல்வர் இன்று ஆலோசனை

நான்காவது கட்ட ஊரடங்கு ? தொழிலதிபர்களிடம் முதல்வர் இன்று ஆலோசனை

309
0

நான்காவது கட்ட ஊரடங்கு ? தொழிலதிபர்களிடம் முதல்வர் இன்று ஆலோசனை

தமிழகத்தில் வரும் 17  தேதியுடன் மூன்றாவது கட்ட ஊரடங்கு நிறைவடைவதால் 18  தேதி முதல் நான்காவது கட்ட ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நான்காவது கட்ட ஊரடங்கு:

ஏற்கனவே மூன்று கட்ட ஊரடங்கிலும் சில தளர்வுகளுடன் பல்வேறு  தொழில் நடைபெற்று வருவதால் அடுத்து வரும் நான்காவது கட்ட ஊரடங்கிலும் பல்வேறு தளர்வுகள் தொழில் துறையினருக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்திய முதல்வர் நேற்று தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தினர் .

அதன் ஒரு பகுதியாகத்தான் இன்று பல்வேறு தொழில் துறையினர் மற்றும் சங்க நிர்வாகிகளுடன்  எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளார் என்று தெரிகிறது .,

துணை முதல்வர் பங்கேற்பு:

இன்று நடைபெறும் தொழில் துறை சங்க நிர்வாகிகளுடனான ஆலோசனையில் துணை முதல்வர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட பல்வேறு உயரதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர்

Previous articleடாஸ்மாக் திறக்கப்படுமா ? உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
Next articleபத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா ?முக்கிய அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here