பேருந்து சேவை தொடக்கம் – தமிழக அரசு முடிவு?
தமிழகத்தில் பொது முடக்கத்தான் காரணமாக நிறுத்த பட்டுள்ள பொது பேருந்து போக்கு வரத்து வரும் 18 தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் கசிந்துள்ளது .
மத்திய அரசு அனுமதி:
கடந்த மார்ச் மாதம் 25 தேதி முதல் நாடு முழுவதும் பொது முடக்கத்தின் காரணமாக தடைபட்டுள்ள பேருந்து போக்குவரத்து சேவை விரைவில் தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது .
போக்குவரத்து சேவை:
தமிழகத்தில் தற்போது அமலில் இருந்து வரும் ஊரடங்கில் போக்குவரத்து சேவையை தவிர மற்ற அனைத்து பணிகளும் 70 சதவீதம் இயங்கி வருகின்றன .
இருப்பினும் பொது போக்குவரத்து முடங்கியதால் மற்ற அனைத்து வணிகர்களும் இன்னமும் இயல்பான நிலையை அடையவில்லை என கூறப்படுகிறது .
1200 கோடி இழப்பு:
அதுமட்டுமின்றி ஊரடங்கின் காரணமாக அரசு போக்குவரத்து கழகத்துக்கு மாதம் சுமார் 1200 கோடி வரை இழப்பு ஏற்பட்டு பெரும் நிதி சுமைக்கு ஆளாகி வருவதாக போக்குவரத்து துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
பேருந்து சேவை துவக்கம்:
எனவே மூன்றவது கட்ட ஊரடங்கு முடியும் வேளையில் உரிய வழிகாட்டுதல்களுடன் பேருந்து சேவையை துவங்க அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பேருந்து கட்டண உயர்வு:
மேலும் ஏற்கனவேஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் விதத்தில் சிறிதளவு பேருந்து கட்டண உயர்வும் அமல் படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக உறுதி படுத்த படாத வகையில் தகவல்கள் வெளியாகியுள்ளன .
சமூக இடைவெளி கட்டாயம்:
அவ்வாறு இயக்கப்படும் பேருந்தில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாகவும் , அடிக்கடி கிருமிநாசினி கொண்டு பேருந்தை சுத்தம் செய்யவும் ,ஓட்டுநர் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்ற பட வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .