Home சினிமா கோலிவுட் 2014 முதல் 2020 வரை திரையரங்குகள் மூடப்பட்டதற்கான காரணங்கள்?

2014 முதல் 2020 வரை திரையரங்குகள் மூடப்பட்டதற்கான காரணங்கள்?

330
0
Corona Virus Theatre Closed

Corona Virus Theatre Closed; 2014 முதல் 2020 வரை திரையரங்குகள் மூடப்பட்டதற்கான காரணங்கள்? 2014 ஆம் ஆண்டு முதல் 2020 வரை திரையரங்குகள் 5 முறை மூடப்பட்டுள்ளன. அதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவில் நாளை மார்ச் 22 ஆம் தேதி ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த 16 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

திரையரங்குகள் மூடப்படுவதாலும், சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாலும் நடிகர், நடிகைகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை.

சினிமா படப்பிடிப்பில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, திரையரங்குகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தான் வருமானம் பற்றாக்குறை ஏற்படும். படப்பிடிப்புக்கு வேலைக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம்.

இப்படி பல பிரச்சனைகளையும் கடந்து வரும் தொழிலாளர்களுக்கு முதலில் ஒரு சல்யூட்….

மக்களவைத் தேர்தல் 2014

கடந்த 2014 ஆம் ஆண்டு 16ஆவது மக்களவைத் தேர்தல் நடந்தது. அப்போது ஏப்ரல் 24 ஆம் தேதி மாலை 6 மணி வரை திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிஜே அப்துல்கலாம் மறைவு

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏவுகணை மனிதர் என்றழைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஜூலை 27 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து 30 ஆம் தேதி அன்று திரையரங்குகள் மூடப்பட்டன. அ

ப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரையரங்குகள் மூடப்பட்டன.

வரி பிரச்சனை

கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட 10 சதவிகித கேளிக்கை வரியை எதிர்த்து போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்த போராட்டத்தைத் தொடர்ந்து கேளிக்கை வரி 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

டிஜிட்டல் புரோஜெக்டர் பிரச்சனை

டிஜிட்டல் புரோஜெக்டர்களுக்கு அதிக விலை வசூலிப்பதாக டிஜிட்டல் சர்வீஸ் ப்ரொவைடர்கள் மீது குற்றம் சாட்டி காலவரையற்ற போராட்டம் நடந்தது.

அப்போதும் திரையரங்குகள் மூடப்பட்டன. இது தான் தமிழ் சினிமாவில் நடந்த அதிக நாள் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரொவைடர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை முடிந்த பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருவது கொரோனா வைரஸ். இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளும் கடந்த 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. வரும் 31 ஆம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here