Rio Raj, விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் ரியோ அப்பாவான சந்தோஷத்தில் என் உலகத்தை ஆள்வதற்கு இளவரசி பிறந்திருக்கிறாள் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகர் ரியோ ராஜ்.
அதன் பிறகு கல்லூரி காலம், சுட சுட சென்னை, யுவர் அட்டென்ஷன் பிளீஸ் (Your Attention Please), காஃபி டீ ஏரியா ஆகிய சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
சரவணன் மீனாட்சி
விஜய் டிவியில் வந்த சரவணன் மீனாட்சி தொடரின் 3ஆவது சீசனில் சரவணனாக முன்னணில் ரோலில் அறிமுகமானார்.
இதன் மூலம் பிரபலமான ரியோ விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வலம் வந்தார். தற்போது டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா
சின்னத்திரையைத் தொடர்ந்து ரியோ, வெள்ளித்திரையிலும் கால் பதித்தார். ஆம், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.
அதற்கு முன்னதாக சத்ரியன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ரியோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கர்ப்பமாக இருந்த ஸ்ருதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ரியோ ராஜ் (Rio Raj)
இதை ரியோ மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், என் உலகை ஆள இளவரசி வந்துவிட்டாள்.
ஆம், எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலம் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, பிரபலங்கள் பலரும் ரியோ – ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜா ராணி சீரியல் பிரபலம் சஞ்சீவ் கார்த்திக் , ரியோ மற்றும் ஸ்ருதிக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில், ஒரே நேரத்தில் அப்பாவாகப் போகிறோம். ஒரே மருத்துவமனையில் தான் பரிசோதனை செய்கிறோம் என்று பதிவிட்டிருந்தார்.
ஆம், சஞ்சீவ் கார்த்திக்கின் மனைவி ஆல்யா மானசாவும் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கும் குழந்தை பிறக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.