Jwala Gutta ஆமாங்க, கல்யாணம் பண்ணிக்கப்போறோம்: ஓபனாக பேசிய ஜுவாலா கட்டா! நடிகர் விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர்.
ஜுவாலா கட்டா விரைவில், திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார்.
விஷ்ணு விஷால் திருமணம் குறித்து மௌனமாக இருக்கும் நேரத்தில் ஜுவாலா கட்டா அவசரப்பட்டு விரைவில் திருமணம் செஞ்சுக்கப் போறோம் என்று தெரிவித்துள்ளார்.
வெண்ணிலா கபடி குழு
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் என்று பல படங்களில் நடித்துள்ளார்.
தற்போது காடன், ஆரண்யா, ஜகஜால கில்லாடி, எப்.ஐ.ஆர். ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
விஷ்ணு விஷால் திருமணம்
இவர் பிரபல இயக்குநரும், நடிகருமான நட்ராஜின் மகள் ரஜனியை காதலித்து கடந்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறான். இந்த நிலையில், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
விஷ்ணு விஷால் காதல்
இதையடுத்து, விஷ்ணு விஷாலும், பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் நெருங்கி பழகினர். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியானது.
நீங்கள் காதலிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், விஷ்ணு விஷாலுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மிஸ்ஸிங் மை பூ என்று சோகமாக இருக்கும் எமோஜியை தனது டுவிட்டரில் ஜுவால கட்டா பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த விஷ்ணு விஷால் இட்ஸ் ஓகே. இப்போதைக்கு சமூக விலகல் மிகவும் முக்கியம். எல்லோருக்கும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டிருந்தார்.
ஜுவாலா கட்டா, விஷ்ணு விஷால் திருமணம்
இந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷாலை காதலிப்பது உண்மை தான். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் ஜுவாலா கட்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜுவாலா கட்டா கூறுகையில், நாங்கள் காதலித்து வருகிறோம். இதில், மறைக்க வேண்டியது ஒன்றும் இல்லை. விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் இருக்கிறோம். தேதி முடிவு செய்யப்பட்டதும், அறிவிப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், தனது இரண்டாவது திருமணம் குறித்து விஷ்ணு விஷால் இதுவரை மௌனம் காத்து வந்த நிலையில், ஜுவாலா கட்டா விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.