82 நாட்களுக்குப் பிறகு நாடு திரும்பிய பிருத்விராஜ்! கொரோனா லாக்டவுன் காரணமாக கிட்டத்தட்ட 82 நாட்கள் பாலைவனத்தில் சிக்கித்தவித்த நடிகர் பிருத்விராஜ் இன்று கேரளா வந்தடைந்துள்ளார்.
நடிகர் பிருத்விராஜ் இன்று கேரளா வந்தடைந்துள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிருத்விராஜ். லூசிபர் படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதோடு, பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.
பிருத்விராக் தமிழில், கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, வெள்ளித்திரை, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், நாவணன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இயக்குநர் பிளஸ்ஸி இயக்கத்தில் உருவாகி வரும் ஆடுஜீவிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜோர்டான் நாட்டில் நடந்தது. படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஜோர்டான் நாட்டிற்கு சென்றிருந்தார்.
ஆனால், அங்கு சென்ற பிறகு தான் நாட்டையே உலுக்கிய கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனால், பிருத்விராஜ் நாடு திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டார். இருப்பினும், அங்கு படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
எனினும், கிட்டத்தட்ட 82 நாட்கள் அங்கே சிக்கிக் கொண்டார். இதையடுத்து, வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அதன்படி, வந்தே பாரத் திட்டத்தின் மூலம், பிருத்விராஜ் மற்றும் ஆடுஜீவிதம் படக்குழுவினர் உள்பட 57 பேரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர்.
முதலில் ஜோர்டானிலிருந்து டெல்லி வந்த ஆடுஜீவிதம் படக்குழுவினர் பின்னர் வேறு விமானம் மூலம் இன்று காலை கொச்சிக்கு அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.