அஜித்திடம் தோற்றுவிட்டோமே: மனக்குமுறலில் ரஜினி
விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு படங்கள் ரிலீசுக்கு முன்பே அடிதடியைத் துவங்கிவிட்டனர். டீசரில் பஞ்ச் வசனங்களைத் திணிக்க சமூக வலைதளங்கள் கொழுந்துவிட்டு எரிந்தது.
பொங்கலுக்கு தியேட்டர் பிடிப்பதிலும் இரு தயாரிப்பாளர்களுக்குள்ளும் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்தது. ஒருவருக்கொருவர் ரிலீஸ் தேதியைக்கூட மாற்ற முன்வரவில்லை.
விளைவு ஒரு படம் தியேட்டரில் உட்காரக்கூட இடம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு படம் பாதி தியேட்டரே நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. பேட்ட ஹிட். விஸ்வாசம் மெஹா ஹிட்.
இதுதான் இருபடங்களின் வெற்றி நிலவரம். பேட்ட படத்தைவிட விஸ்வாசம் படம் 5 நாட்களுக்குமேல் 400, 300, 250 என்ற கணிக்கில் டிக்கெட் வசூலிக்கப்பட்டது.
பொங்கல் விடுமுறை துவங்கியது முதல் விஸ்வாசம் படத்தின் எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல். அப்போ வசூல் நிலவரம் எப்படி இருக்கும்னு பாத்துகோங்க.
இது ரஜினிக்கு பெரிய வருத்தத்தைக் கொடுத்துள்ளது. அரசியலில் குதிக்கும் முடிவில் இருந்த ரஜினி, இளைய நடிகருடன் வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவிவிட்டார்.
அரசியல் குதிப்பதற்குமுன் தன்னுடைய முழுபலத்தையும் மீண்டும் ஒருமுறை பரிசோதித்து பார்த்துக்கொள்ளவது நல்லது.
ரஜினியின் அரசியல் வாழ்க்கைக்கு அஜித்தே அரோகரா சொல்லிவிடுவார் போல உள்ளது.