ஐன்ஸ்டீன் பிறந்த தினம். இயற்பியல் உலகில் இவர் தான் கெத்து. உலகத்திலேயே பிரபலமான சமன்பாடு எது என்றால் அனைவரும் யோசிக்காமல் சொல்வர் e=mc2 என்று.
அறிவியல் மேதை
அறிவியலை அறியாதோறும் இவரை அறிவர். 1915-ஆம் ஆண்டு அறிவியல் பேரறிஞர்கள் பலபேர் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. அந்த நேரத்தில் தனது பொது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்.
அது அறிவியல் உலகத்தில் மிகப்பெரிய மாற்றத்தையும் ஒரு புரட்சியையும் ஏற்படுத்தியது. குவாண்டம் தியரிக்கு முன்னோடியாக இருந்தது இவர் செயல்படுத்திய போட்டோ எலக்ட்ரிக் மெத்தட்.
1879-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14-ஆம் தேதி ஜெர்மனியில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். மூன்று வயது வரை பேசாமல் இருந்ததால் அவருக்கு கற்றல் குறைபாடு இருக்குமோ என்று பெற்றோர் அஞ்சினர்.
ஐன்ஸ்டீன் பள்ளியில் ஒரு சராசரி மாணவனாகவே தான் இருந்தார். நான்கு வயதில் அவருக்கு அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட்டது. ஒருமுறை அவர் தந்தை கேம்பஸ் திசைகாட்டி அவருக்கு பரிசாக தந்தார்.
இவருக்கு அறிவியல் மேல் ஈர்ப்பு வந்து தன் பள்ளியில் சொந்தமாகவே கால்குலஸ் என்னும் கணித கூற்றை கற்றுக்கொண்டார். பின்னர் சந்தேகங்களை கேட்க தொடங்கினார்.
இவர் சந்தேகங்களுக்கு பதிலளிக்க பள்ளி ஆசிரியர்கள், அடுத்து என்ன கேட்கப் போகிறார் என்று அஞ்சினார்கள். ஐன்ஸ்டைன் சிறுவயதிலேயே சொற்களாலும் வார்த்தைகளாலும் சிந்திப்பதை காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார்.
ஐன்ஸ்டீன்க்கு வயலின் வாசிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. கற்றுக்கொண்டு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.
அவரின் 15-ஆவது வயதில் இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவர் குடும்பம் கஷ்டப்பட அங்கிருந்து சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றார்.
ஐன்ஸ்டீன் அங்குள்ள கல்லூரியில் சேர்ந்தார். அதிலிருந்து அந்த நாட்டு குடியுரிமை பெற்றார். படித்தவுடன் அங்கு அவருக்கு கிடைத்த வேலை விஞ்ஞானிகள் கண்டு பிடிப்பதை ஆராய்வது.
அதில் அவருக்கு நிறைய ஓய்வு கிடைத்தது அந்த ஓய்வு நேரத்தில் சொந்தமாக ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார்.
1905-ஆம் ஆண்டு சுரோஜ் பல்கலைக்கழகத்தில் அவருக்கு முனைவர் பட்டம் கிடைத்தது. கண்ணுக்குத் தெரியாத அணுக்களைப் பற்றியும் ஆகாயத்தையும் ஆராய்ந்த ஐன்ஸ்டீன் “தியரி ஆப் ரிலேட்டிவிட்டி” கோட்பாட்டை வெளியிட்டார்.
அதுதான் சார்பியல் கோட்பாடு. அந்த கோட்பாடு மூலம் உலகிற்கு தந்த கணித இயற்பியல் வாய்ப்பாடு தான் e=mc2.
அதை கண்டுபிடிக்கும் போது அவருக்கு வயது 26 தான் 1921-ஆம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், சார்பியல் கோட்பாட்டில் விஞ்ஞானிகளுக்கு கருத்து வேறுபாடு நிலவியதால் அதற்கு கொடுக்காமல் “ஃபோட்டோ எலெக்டிரிக் எபெக்ட்” என்ற கண்டுபிடிப்புக்காக அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
முதலாம் உலகப்போரில் ஜெர்மனி கலந்து கொண்டதனால் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்தார் ஐன்ஸ்டீன்.
ஜெர்மனி ஆட்சியில் ஹிட்லர் வந்தபோது யூதர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதனால் ஐன்ஸ்டீன் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார்.
அணு குண்டு அறிமுகம்
1939-ஆம் ஆண்டு வேறு சில இயற்பியல் வல்லுநர்களுடன் இணைந்து அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் இருக்கு கடிதம் எழுதினார்.
ஹிட்லர் ஆட்சியில் இருக்கும் ஜெர்மனி அணுகுண்டு தயாரிக்கும் வல்லமையில் இருக்கிறது. அதை விரைவில் தயாரித்து விடுவார்கள் என்று ஐன்ஸ்டீன் கடிதத்தில் கூறினார்.
அமெரிக்கா, ஜெர்மனி கண்டுபிடிக்கும் பணியை தடுத்து நிறுத்தும் என்று நினைத்தார். ஆனால், அதாபர் ரூஸ்வெல்ட் ஆதரவில் அமெரிக்கா நிர்வாகமோ ஐன்ஸ்டீனுக்கு தெரியாமலே சொந்தமாக அணுகுண்டு கண்டுபிடிக்கத் தொடங்கியது.
அதன் விளைவுதான் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஹிரோஷிமா நாகசாகியில் நடந்த சம்பவம். e=mc2 தான் அணுகுண்டு கண்டுபிடிப்புக்கு அடிப்படையாக அமைந்தது.
இது ஐன்ஸ்டீன் இறக்கும்வரை உறுத்தலாகவே இருந்தது. ஆனால் ஐன்ஸ்டீன் கோட்பாட்டால் பல நன்மைகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது.
தங்கள் இனத்தவர் என்ற பெருமையுடன் இஸ்ரேல் தங்கள் நாட்டுக்கே அதிபராகும் படி அழைப்பு விடுத்தது ஐன்ஸ்டீனுக்கு.
நான் அரசியலுக்கு லாயக்கில்லாதவன் என்று சொல்லி அந்த பதவியை ஏற்க மறுத்துவிட்டார் ஐன்ஸ்டீன். இவரின் மூளைக்கே தனி வரலாறு ஒன்று உண்டு.
ஐன்ஸ்டீன் பிறந்த தினம்
இன்று ஐன்ஸ்டீன் பிறந்து 141 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. இவரது கண்டுபபிடிப்புகள் உலகம் பயணிக்கும் வரை இவரின் கண்டுபிடிப்புகளும் பயணிக்கும் என்பது துளியும் சந்தேகம் இல்லாத ஒன்று.
இவர் இறந்து 66 வருடங்கள் கடந்துவிட்டது. இன்னும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களும் இவரை பற்றி இன்றளவும் பெருமை பேசி வருகிறார்கள்.