நடிகை அமலா பால் தூங்கி எழுந்தவுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை அமலா பால். விஜய், தனுஷ், விதார்த், ஜெயம் ரவி, விஷ்ணு விஷால், சித்தார்த், அரவிந்த் சாமி ஆகிய நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார்.
எனினும், இவர்களது திருமண உறவில் கருத்து வேறுபாடு ஏற்படவே இருவரும் பிரிந்துவிட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இயக்குநர் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார்.
இவரைத் தொடர்ந்து அமலா பாலும் விரைவில் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விவாகரத்திற்குப் பிறகு அவ்வளவாக சினிமா வாய்ப்பு இல்லாத நிலையில், தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்போது தான் அவருக்கு ஆடை படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் ரத்ன குமார் இயக்கிய இந்தப் படத்தில் அமலா பால் ஆடையின்றி நிர்வாணமாக நடித்த காட்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் டிரைலர் வரை தொடக்கம் முதலே சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.
ஆனால், அதையெல்லாம் பெரிதாக நினைக்காமல், தொடர்ந்து அந்தப் படத்தில் நடித்து முடித்தார். படம் திரைக்கு வந்து நல்ல வரவேற்பு பெற்றது.
குறிப்பாக குடும்ப பெண்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. எனினும், நிர்வாணமாக நடித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது, அதோ அந்தப் பறவை போல, கேடவர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அண்மையில், அதோ அந்தப் பறவை போல படத்தின் டிரைலர் வெளியானது.
இந்த நிலையில், நைட் உடையில் அமலா பால் தூங்கி எழுந்து, மேக்கப் இல்லாமலும் கண்ணை மூடியவாறு புகைப்படம் எடுத்துள்ளார். அதனை தனது இன்ஸ்டாகிராம்ப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதோடு, நீங்கள் ஒரு மரத்தை நடும் போது அதிலுள்ள ஒவ்வொரு இலைகளும் உங்களைச் சொல்லும்.
மேலும், நீங்கள் விதைப்பதன் மூலம் உங்களுக்கு பலனைத் தரும். அதே போன்று தான் நட்பும்.
நண்பர்களே உங்களுக்கு ஏதேனும் உணர்வு இருந்தால் அன்பைத் தவிர வேறு எதையும் விதைக்காதீர்கள். நீங்கள் தேடுவதன் மூலம் உங்களது அன்பைக் காட்டுகிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.
அந்தப் புகைப்படத்தைக் கண்ட நெட்டிசன்கள் என்ன அமலா பால் செம போதையா என்று விமர்சித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு சில தமிழ் படங்களைத் தவிர்த்து அமலா பாலுக்கு வேறு எந்தப் படமும் கையில் இல்லை.
இப்படங்களுக்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து அவருக்கு சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.