Home சினிமா கோலிவுட் மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் ஆண்ட்ரியா?

மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் ஆண்ட்ரியா?

344
0
Andrea Jeremiah

Andrea Jeremiah; மீண்டும் வெற்றிமாறன் கூட்டணியில் ஆண்ட்ரியா? வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் ஆண்ட்ரியா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் என்று தகவல் வந்துள்ளது.

பின்னணி பாடகியான ஆண்ட்ரியா கண்ட நாள் முதல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றார்.

எனினும், சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் ஹீரோயினாக வலம் வந்தார்.

தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, ஆம்பள, வலியவன் என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றி மாறன் இயக்கத்தில் வட சென்னை படத்தில் அமீருக்கு மனைவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு சமுத்திரக்கனியை திருமணம் செய்தார்.

இப்படத்திற்கு ஆண்ட்ரியாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் வெற்றி மாறன் கூட்டணியில் புதிய படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், வெற்றி மாறன் – தனுஷ் காம்பினேஷனில் அண்மையில் திரைக்கு வந்த படம் அசுரன். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பல மொழிகளில் அசுரன் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. இவர், சூரியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இயக்குநரைத் தொடர்ந்து படம் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் வெற்றி மாறன். இவரது தயாரிப்பில், உதயம் என்ஹெச்4 (Udhayam NH4), பொறியாளன் (Poriyalan), காக்கா முட்டை (Kaakka Muttai), கொடி (Kodi), அண்ணனுக்கு ஜே(Annanukku Jai) ஆகிய படங்களை தயாரித்துள்ளார்.

இவரது தயாரிப்பில் கடைசியாக வெளியான படம் மிக மிக அவசரம். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்திற்குப் பிறகு தற்போது கிராஸ் ரூட் புரோடக்‌ஷன் பேனரின் சார்பில் புதிய படம் ஒன்றை தயாரிக்கிறார். இதில், ஆண்ட்ரியா முன்னணி ரோலில் நடிக்கிறார். இவருடன் இணைந்து விஜி சந்திரசேகர் நடிக்கிறார்.

ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க இருப்பதாக தெரிகிறது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக இப்படத்தின் ரிலீஸில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

SOURCER SIVAKUMAR
Previous articleலாக்டவுன்21: போலீசை லபக் எனக் கடித்து துப்பிய பெண்! – ரத்தம் தெறித்தது
Next articleகால்பந்தாட்ட ராஜா பீலே புகழும் வீரர் யாரென்று தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here