Home சினிமா கோலிவுட் அட்லீ – அர்ஜூன் தாஸ் கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பு: அந்தகாரம் டிரைலர் புதிய சாதனை!

அட்லீ – அர்ஜூன் தாஸ் கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பு: அந்தகாரம் டிரைலர் புதிய சாதனை!

269
0
Andhaghaaram Trailer Hits 1 Million Views

Andhaghaaram; அட்லீ – அர்ஜூன் தாஸ் கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பு: அந்தகாரம் டிரைலர் புதிய சாதனை! அட்லீ – அர்ஜூன் தாஸ் கூட்டணியில் உருவாகி வரும் அந்தகாரம் படத்தின் டிரைலர் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.

அந்தகாரம் டிரைலர் வெளியாகி 2 நாட்களில் 1 மில்லியன் வியூஸ் வரை பெற்று சாதனை படைத்துள்ளது.

அட்லீ தயாரிப்பில் வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் ஷங்கர் இயக்கத்தில் வந்த எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லீ.

இவர், ஆர்யா, நயன்தாரா, ஜெய் ஆகியோரது நடிப்பில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே குறிப்பாக காதலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தொடர் வெற்றிக்குப் பிறகு ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஜீவாவை வைத்து சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை கொடுத்தார்.

அடுத்ததாக அட்லீ தயாரிக்கும் புதிய படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அண்மையில், இப்படத்திற்கு அந்தகாரம் என்று டைட்டில் வைக்கப்பட்டது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

அந்தகாரம் போஸ்டர் தூரத்தில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பது போன்றும் புத்தகம் அருகில் வைக்கப்பட்டிருப்பது போன்றும், பழைய வீடு போன்றும் காட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்குகிறார்.

இந்த நிலையில், அந்தகாரம் படத்தின் டிரைலர் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில், 1 மில்லியன் வியூஸ் வரை பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனவை தடுக்க உருவான அதிபயங்கரமான மருந்து – ஜெர்மன் விஞ்ஞானிகள் பெருமிதம்
Next articleதமிழ்நாட்டில் பெருநகரங்கள் உட்பட 22 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here