Home சினிமா கோலிவுட் மீண்டும் இணைந்த ஆர்யா – சாயிஷா ஜோடி!

மீண்டும் இணைந்த ஆர்யா – சாயிஷா ஜோடி!

311
0
Teddy Teaser Date

Teddy Teaser; ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் டெடி படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்பது குறித்து முக்கியமான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் இளம் காதல் ஜோடிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றவர் ஆர்யா. கஜினிகாந்த் படத்தின் மூலம் நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்குப் பிறகு காப்பான் படத்தில் இருவரும் நடித்திருந்தனர். ஆனால், ஜோடியாக நடிக்கவில்லை. இந்த நிலையில், டெடி படத்தின் மூலம் ஆர்யா – சாயிஷா இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.

சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் டெடி (Teddy). ஞானவேல் ராஜா தயாரித்த இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

டெடி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (Teddy First Look) வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றநிலையில், டீசர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஆர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் நாளை காலை 11 மணிக்கு டெடி டீசர் (Teddy Teaser) வெளிவரும் என்று அறிவித்துள்ளார். அதோடு, இதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இப்படம் குறித்து சக்தி சௌந்தர்ராஜன் கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் டெடி (Teddy) பியர் அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கதாபாத்திரம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலமாகவே டெடி பியர் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

டெடி பியர் சண்டையிடும் ஒரு கதாபாத்திரமாக நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆதால், இந்தப் படத்தின் மூலம் டெடி பியர் அதிகளவில் ரசிகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக இப்படத்தில் இடம்பெற்றுள்ள என் இனிய தனிமையே பாடல் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.

SOURCER SIVAKUMAR
Previous articleகொரோனா லேட்டஸ்ட் நியூஸ்; 43பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் காட்டுத்தீ போல பரவி வருகிறது
Next articleP3: எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணும் படக்குழு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here