Home சினிமா கோலிவுட் P3: எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணும் படக்குழு!

P3: எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணும் படக்குழு!

360
0
Plan Panni Pannanum Audio and Trailer

பிளான் பண்ணி பண்ணனும் (Plan Panni Pannanum) படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியோ ராஜ் மற்றும் ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகியுள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் இசை வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் ஹீரோவான ரியோ ராஜ், நடிகை ரம்யா நம்பீசன் உடன் இணைந்து நடித்துள்ள அடுத்த படம் பிளான் பண்ணி பண்ணனும்.

கனா காணும் காலங்கள் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானவர் நடிகர் ரியோ ராஜ்.

கல்லூரி காலம், சுட சுட சென்னை, காஃபி டீ ஏரியா, யுவர் அட்டென்ஷன் பிளீஸ் (Your Attention Please) ஆகிய சன் மியூசிக் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

சரவணன் மீனாட்சி சீரியலின் 3 ஆவது சீசன் மூலம் அதிகளவில் பிரபலமானார்.

அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளரானார். தற்போது டான்ஸிங் சூப்பர் ஸ்டார்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

சின்னத்திரையைத் தொடர்ந்து ரியோ, வெள்ளித்திரையிலும் கால் பதித்தார். ஆம், சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் உருவான நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆனார்.

அதற்கு முன்னதாக சத்ரியன் படத்திலும் நடித்துள்ளார். தற்போது பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்கி வருகிறார். காமெடி கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் ரியோவிற்கு ஜோடியாக நடிகை ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

ராஜேஷ் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், இப்படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் 11 ஆம் தேதி காலை 9 மணிக்கு பிளான் பண்ணி பண்ணனும் படத்தின் இசை மற்றும் டிரைலர் (Plan Panni Pannanum Audio and Trailer) வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சத்யம் சினிமாவில் நடக்கும் இந்நிகழ்ச்சியிக்கு சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் ரோபோ சங்கர், தங்கதுரை, விஜி சந்திரசேகர், பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இசை வெளியீட்டிற்கு முன்னதாக இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களின் டிராக் லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.

பிளான் பண்ணி பாடலில் தொடங்கி நீங்கும் போதில் வரை மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ரியோ – ஸ்ருதி தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ரியோ மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், என் உலகை ஆள இளவரசி வந்துவிட்டாள்.

ஆம், எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும், சேயும் நலம் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleமீண்டும் இணைந்த ஆர்யா – சாயிஷா ஜோடி!
Next articleபோதையில் தான் பெண்கள் போராட வருகிறார்கள் – பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here