Sara Arjun; தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி: இதோ பேபி சாரா! விக்ரம் நடிப்பில் வந்த தெய்வத்திருமகள் படத்தின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற பேபி சாரா ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வந்துவிட்டார்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா அடுத்து தனது புகைப்படங்களை வெளியிட்டு ஹீரோயினாக நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
இயக்குநர் பிரவால் ராமன் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான 404 என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பேபி சாரா.
6 வயதுக்கு முன்பிருந்தே பாலிவுட்டில் குறும்படம், வணிக ரீதியிலான விளம்பரங்கள் மற்றும் படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம், அமலா பால் ஆகியோரது நடிப்பில் திரைக்கு வந்த தெய்வ திருமகள் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
படத்தில் இவர் தான் மெயின் என்று கூறும் அளவிற்கு இவரது பங்களிப்பு இருந்தது. தனது திறமையான நடிப்பால் ஒட்டுமொத்த சினிமா உலகையும் தன் பக்கம் ஈர்த்தார். இப்படத்திற்கு விஜய் சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது.
தெய்வ திருமகள் படத்திற்கு பிறகு சித்திரையில் நிலாச்சோறு, சைவம், விழித்திரு, சில்லு கருப்பட்டி ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் இவரது பங்களிப்பு இருந்துள்ளது.
பேபி சாராவாக இருந்து தற்போது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். ஹீரோயினாக நடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக தொடர்ந்து தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
விரைவில், சாரா ஹீரோயினாக நடிக்க வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.