தாய்மையை போற்றும் சீன்கள் ஒரு பார்வை! உலகம் முழுவதும் சர்வதேச அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், சினிமாவில் தாய்மையை போற்றும் சீன்கள் ஏராளமாக வந்துள்ளன.
சினிமாவில் அம்மாவை போற்றும் காட்சிகள் எத்தனையோ உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா மட்டுமல்ல உலக சினிமாவில் தாய்மையை போற்றும் காட்சிகள் எத்தனையோ உருவாக்கப்பட்டுள்ளது.
சர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு அம்மாவை போற்றிய சில சினிமா காட்சிகள் பற்றி இங்கு பார்ப்போம்.
காலங்காலமாக சினிமாவில் ஹீரோ, ஹீரோயினுக்கு அடுத்தபடியாக அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுவது என்னவோ ஹீரோ, ஹீரோயின்களின் அம்மா ரோலுக்கு தான்.
அம்மா கதாபாத்திரங்களில் மனோரமா, லட்சுமி ராமகிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, ரோஜா, சமந்தா, ஜோதிகா, அமலா பால், ரோஹினி, கீதா, ராதிகா, ரேணுகா சௌகான், ரம்யா கிருஷ்ணன், நதியா, லட்சுமி, எஸ்.என்.லட்சுமி, பண்டரி பாய், சுஜாதா, ஸ்ரீ வித்யா, சுமித்ரா, கோவை சரளா என்று ஏராளமான நடிகைகள் அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சரண்யா பொன்வண்ணன்
தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷிற்கு அம்மாவாக நடித்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தில், நயன்தாராவுக்கு அம்மாவாக நடித்துள்ளார்.
ஜூங்கா படத்தில் விஜய் சேதுபதிக்கு அம்மாவாகவும், கதா நாயகன் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு அம்மாவாகவும், ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாகவும், கொடி படத்தில் தனுஷிற்கு அம்மாவாகவும், தாண்டவம் படத்தில் விக்ரமுக்கு அம்மாவாகவும் என்று பல படங்களில் அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ராதிகா
வீர தாலாட்டு படத்தில் முரளிக்கு அம்மாவாகவும், தெறி படத்தில் விஜய்க்கு அம்மாவாகவும், பூஜை படத்தில் விஷாலுக்கு அம்மாவாகவும், பசும்பொன் படத்தில் பிரபுவுக்கு அம்மாவாகவும் என்று ஏராளமான படங்களில் ராதிகா அம்மா கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.
சூர்ய வம்சம், பவித்ரா, உயிரோடு உயிராக, நானும் ரௌடி தான் என்று பல படங்களை ராதிகாவின் அம்மா ரோலுக்கு உதாரணமாக குறிப்பிடலாம்.
நதியா
ஜெயம் ரவி நடிப்பில் வந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படம் ரசிகர்களிடையே கொண்டாடப்படும் ஒரு சூப்பர்ஹிட் படம். இந்தப் படத்தில், ஜெயம் ரவிக்கு அம்மாவாக நதியா நடித்திருந்தார்.
சண்டை படத்தில் நடிகை ரம்யா ராஜ்க்கு அம்மாவாகவும், தாமிரபரணி படத்தில் நடிகை பானுவிற்கு அம்மாவாக நடித்திருந்தார். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
திரையில் மட்டுமல்லாமல், நிஜத்திலும் பிரபலங்களுக்கு அம்மாவாக பலரும் திகழ்கின்றனர்.
உதாரணமாக சாந்தணுவிற்கு அம்மாவாக பூர்ணிமா பாக்யராஜ், நாக சைதன்யாவிற்கு அம்மாவாக நடிகை அமலா, பேபி நைனிகாவிற்கு அம்மாவாக மீனா, ஷாலினி, ஷோபா சந்திரசேகர், லதா ரஜினிகாந்த் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் தங்களது அம்மாக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.