Home சினிமா கோலிவுட் ஜாலியா வீட்டு வேலை செய்யும் பிரபலங்கள்: வைரலாகும் வீடியோ!

ஜாலியா வீட்டு வேலை செய்யும் பிரபலங்கள்: வைரலாகும் வீடியோ!

704
0
Corona Lockdown

ஜாலியா வீட்டு வேலை செய்யும் பிரபலங்கள்: வைரலாகும் வீடியோ! கொரோனா லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் வீட்டிலேயே இருக்கும் நிலையில், நடிகர்கள் வீட்டு வேலை செய்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர்கள், வீட்டு வேலை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சீனாவில் ஆரம்பித்தது கொரோனா பாதிப்பு. நாளடைவில் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இதுவரை 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இப்படி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக மே 3 ஆம் தேதி வரையில் லாக்டவுன் உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக நடிகர், நடிகைகள், அரசியல் தலைவர்கள், அப்பாவி ஜனங்கள் என்று அனைவருமே வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர்.

எனினும், நடிகர், நடிகைகள் பிஸியாகத்தான் இருக்கிறார்கள். ஆம், இதுவரை கிச்சன் பக்கமே போகாதவர்கள் தற்போது கிச்சனே கதி என்று இருக்கும் நிலை வந்துவிட்டதே.

சமையல் செய்வது, வீட்டு வேலை செய்வது, துணி துவைப்பது, பாத்திரம் கழுவுவது, உடற்பயிற்சி, யோகா என்று பிஸியாக இருக்கின்றனர்.

அந்த வகையில் வீட்டில் இருக்கும் நடிகர்கள் எப்படியெல்லாம் ஜாலியாக பொழுதை செலவிடுகிறார்கள் என்று நீங்களே பாருங்கள்.

இந்த வீடியோவில், அமித் பார்கவ், திரவியம், சாண்டி, ராம் சரண், நகுல் என்று பிரபலங்கள் பலரும் வீட்டு வேலை செய்கின்றனர்.

SOURCER SIVAKUMAR
Previous articleகல்யாணமான 10 ஆவது நாளில் கணவரை பிரிந்து விவாகரத்து பெற்றது ஏன்? விஜே ரம்யா விளக்கம்!
Next articleகொரோனா பரவலுக்கு மத்தியில் மாமூல் வாங்கிய பெண் போலீஸ் டிஐஜி அதிரடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here