Home சினிமா கோலிவுட் ஓ போடு ஓ போடு: ஜெமினி ரிலீசாகி 18 வருடம் ஆச்சுப்பு!

ஓ போடு ஓ போடு: ஜெமினி ரிலீசாகி 18 வருடம் ஆச்சுப்பு!

402
0
18 Years Of Gemini

ஓ போடு ஓ போடு: ஜெமினி ரிலீசாகி 18 வருடம் ஆச்சுப்பு! சியான் விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்த ஜெமினி படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்த ஜெமினி படம் வெளியாகி இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இயக்குநர் சரண் இயக்கத்தில் சியான் விக்ரம், கிரண், கலாபவன் மணி, விணு சக்ரவர்த்தி ஆகியோர் பலர் நடிப்பில் உருவான படம் ஜெமினி.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வந்தது. ரௌடி வேலை செய்து வரும் சியான் விக்ரம், காதலில் விழுவதும், அதன் பிறகு தனது ரௌடி தொழிலை விடுவதும் தான் படத்தின் கதை. ரௌடி தொழிலை விடும் போது அவர் சந்திக்கும் பிரச்சனைகள் தான் இந்தப் படம்.

இந்தப் படத்தை ஏவிஎம் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் தான் தயாரித்தது. பரத்வாஜ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இப்படத்தில் அவரது இசையில் வந்த ஒவ்வொரு பாடலும் ரசிக்கும்படி அமைந்தது.

அதில் குறிப்பாக ஓ போடு ஓ போடு பாடல் அமைந்தது. இன்றும் இந்தப் பாடலுக்கு ரசிகர்களிடையே மௌசு இருக்கிறது.

விக்ரம் வாழ்க்கையில் சிறந்த படமாக ஜெமினி அமைந்தது. இந்த நிலையில், ஜெமினி படம் திரைக்கு வந்து இன்றுடன் 18 ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதன் காரணமாக ஹலோவில் 18YearsOfGemini என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

வரும் 17 ஆம் தேதி விக்ரம் தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதன் காரணமாக அவரது படங்கள், We Love Chiyaan Vikram, Vikram Getups ஆகிய ஹேஷ்டேக்குகள் ஹலோவில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCER SIVAKUMAR
Previous articleபெட்ரோல் உற்பத்தி குறைப்பு கொரோனா வைரஸ் பாதிப்பால்
Next articleகொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்கவிடாமல் தடுக்கும் இஸ்லாமியர்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here